சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்கிறார் கூல் சுரேஷ்.. இதற்குதானே ஆசைப்பட்டாய் என ரசிகர்கள் கலாய்!

சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. இதில் சிம்பு உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு பேசினர்.

அடுத்ததாக சிம்புவின் பத்து தல படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு சாதாரண இளைஞன் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறான் என்பதை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

சிறப்பான கதைக்களம்

சிறப்பான கதைக்களம்

முன்னதாகவும் இதுபோன்ற கதைக்களங்கள் கோலிவுட்டில் படங்களாக வெளிவந்தாலும் இந்தப் படத்தில் தன்னுடைய வழக்கமான பாதையில் இருந்து விலகி கௌதம் மேனன், சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் எடுத்து முடித்துள்ளார். அவரது இந்த முயற்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விரைவில் அடுத்த பாகம்

விரைவில் அடுத்த பாகம்

இந்தப் படத்தின் அடுத்த பாகமும் விரைவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதில் கேங்ஸ்டராக உருவான சிம்பு, எப்படி அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறார் என்பதாக கதை செல்லும் என்றும் சிம்பு நேற்றைய தினம் பங்கேற்ற சக்சஸ் மீட்டில் தெரிவித்துள்ளார். அடுத்ததாக இவர் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

பத்து தல படம்

பத்து தல படம்

இந்தப் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். ஏஆர் ரஹ்மான் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பத்து தல படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் டிசம்பர் 14ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூல் சுரேஷ் பிரமோஷன்

கூல் சுரேஷ் பிரமோஷன்

இதனிடையே, வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சசிற்கு நடிகர் கூல் சுரேஷும் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவர் விமர்சனம் செய்யும் ஒவ்வொரு படத்திலும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் பெயரை அவர் உச்சரித்து வந்தார். இதுகுறித்து நடிகர் சிம்புவும் கூல் சுரேஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சிம்பு படத்தில் கூல் சுரேஷ்

சிம்பு படத்தில் கூல் சுரேஷ்

இந்நிலையில் நேற்றைய சக்சஸ் மீட்டில் பங்கேற்ற நடிகர் சிம்புவிடம் கூல் சுரேஷிற்கு முறையான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு, அப்படி எல்லாம் இல்லை என்றும் தன்னுடைய அடுத்தப் படத்தில்கூட அவர் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 14ல் பத்து தல ரிலீஸ்

டிசம்பர் 14ல் பத்து தல ரிலீஸ்

சிம்பு நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள படம் பத்து தல. இந்தப் படத்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளார். தற்போது ட்ரெண்டாகிவரும் கேங்ஸ்டர் படங்களின் கதைக்களத்தையே இந்தப் படத்தில் கிருஷ்ணா எடுத்துள்ளார். இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

எந்தப் படத்தில் இணைவார்?

எந்தப் படத்தில் இணைவார்?

தனது அடுத்தப்படத்தில் கூல் சுரேஷ் நடிக்கவுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார். பத்து தல படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் அவர் அதில் இணைய வாய்ப்பில்லை. சிம்புவின் அடுத்தப்படம் கொரோனா குமார் என்று கூறப்பட்ட நிலையில், அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கூல் சுரேஷ் எந்தப் படத்தில் சிம்புவுடன் இணைவார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X