Vijayakanth: தேமுதிக கட்சியுடன் கூல் சுரேஷ் கட்சி (CSK) கூட்டணியா.. கூல் சுரேஷ் சொன்னது என்ன?

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் அந்த இடமே போக்குவரத்தால் ஸ்தம்பித்தது.

இதையொட்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பிரபலங்களும் வந்திருந்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.

vijayakanth cool suresh tamil cinema

மறைந்த நடிகர் விஜயகாந்த்: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆன நிலையில், இன்றைய தினம் அவரது நினைவுதினத்தை தேமுதிகவினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனுசரித்தனர். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் கூடியதால் அங்கு மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் நின்றுக் கொண்டிருந்தன. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் தடையை மீறி அங்கு தேமுதிகவினர் பேரணி நடத்தினர். பல பிரலங்களும் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

கூல் சுரேஷ் மரியாதை: அந்தவகையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்திருந்த நடிகர் கூல் சுரேஷ், அவரது புகைப்படத்தை கையில் ஏந்தி ரசிகர்களுடன் கைக்குலுக்கினார். அநத்ப் புகைப்படத்தில் வாழும் தெய்வம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியகூல் சுரேஷ், விஜயகாந்தின் படப்பாடல் ஒன்றை பாடி தன்னுடைய பேட்யை துவங்கினார். முன்னதாக விஜயகாந்தை நினைத்து கண்கலங்கிய அவர், விஜயகாந்த் மறைந்தும் இன்றும் பலரது உள்ளங்களில் இல்லங்களில் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக கூறினார். கருப்பு எம்ஜிஆர் என்று புகழப்பட்ட அவரது புகழ் என்றைக்கும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கூல் சுரேஷ் பாராட்டு: விஜயகாந்தின் முதலாமாண்டு குருபூஜையில் கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பிலும் கூல் சுரேஷ் கட்சி சார்பிலும் கேப்டனிடம் ஆசிர்வாதம் வாங்க வந்ததாக அவர் கூறினார். கேப்டனின் ஆசிர்வாதம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக இருந்துக் கொண்டேஇருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஓட்டுப் போட செல்லும் மற்ற கட்சிகளின் தொண்டர்களும் ஒருகணம் விஜயகாந்தை நினைத்துவிட்டு தான் ஓட்டு போடுவார்கள் என்று தெரிவித்துள்ள கூல் சுரேஷ், அந்த அளவிற்கு கேப்டனின் ரசிகர்களாகவே அவர்கள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணி?: கேப்டனின் புகழ் என்றென்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த தலைமுறையை அண்ணியாரும் கேப்டனின் மகனும் சிறப்பாக வழி நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேமுதிக கட்சியுடன் கூல் சுரேஷ் கட்சி இணையுமா என்பதை 2026ம் ஆண்டில் வரும் சட்டமன்ற தேர்தல் தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X