விஜயகாந்தைவிட பிரேமலதாவிற்கு உதவும் மனப்பான்மை அதிகம்.. உணர்ச்சிவசப்பட்ட கூல் சுரேஷ்!
சென்னை: விஜயகாந்தைவிட பிரேமலதாவிற்கு உதவும் மனப்பான்மை அதிகம் என்று கூல் சுரேஷ்பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயர் வைத்தால் நன்றாகத் தான் இருக்கும், ஒருவேளை அப்படி விஜயகாந்தின் பெயர் வைக்க முடியவில்லை என்றால், நடிகர் சங்கத்தில் ஒரு கல்வெட்டாவது வைக்க வேண்டும் என்றார்.
தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பத்து ஆண்டுக்கும்மேலாக உடல் நலமின்றி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக அடிக்கடி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நலம் பெற்ற விஜயகாந்த் டிசம்பர் 14ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.

இதையடுத்துகடந்த 27-ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டு மொத்த, திரையுலக பிரபலங்களையும், மக்களையும் தேமுதிக தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் உயிரிழந்தது முதல் தற்போது வரை பலர் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
கூல் சுரேஷ்: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், விஜய்காந்த் மறைவு குறித்து பேசினார். அதில், நடிகர் விஜயகாந்த் மறைந்து விட்டார், ஆனால் சில பேர் தவறான தகவலை பரப்பிக்கொண்டு வருகிறார்கள். அதாவது கேப்டனுக்கு இந்த மாதிரி சூழ்நிலை ஏற்பட்டதற்கு காரணம் அவரது மனைவியார் பிரேமலதா தான் என்று பொய்யான சில கூறிவருகின்றனர். ஆனால், விஜயகாந்தைவிட பிரேமலதாவிற்கு உதவும் மனப்பான்மை அதிகம். அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், போண்டா மணி இறந்ததற்கு, பிரேமலதா அவர்கள் மீசை ராஜேந்திரன் மூலம் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். அப்படி நல்ல குணம் படைத்தவர்கள் தான் கேப்டனின் மனைவியார். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், கேப்டன் மனைவிக்கு அவர்கள் மனைவியாக அமைந்தது கேப்டனுக்கு லக், அது போல கேப்டன் நமக்கு அமைந்தது நமக்கு லக். இதனால் தயவு செய்து தவறான செய்தி எதையும் பரப்பாதீர்கள்.

பொய்யான செய்தி பரப்பாதீர்கள்: அதே போல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் தவசி படத்திற்கு நான் தான் வசனம் எழுதி இருந்தேன் என்று கூறியிருந்தார். பலர் அது பொய் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், உண்மையில் அந்த படத்திற்கு வசனம் எழுதியது சீமான் அவர்கள் தான். அந்த படத்திற்கு பெயர் போடாததற்கு காரணம் அவர் ஒரு இயக்குநர், இந்த படத்திற்கு வசனம் எழுதியது தெரிந்தால், அதே போல் வசனம் எழுதும் வாய்ப்புத்தான் வரும் என்பதால், அதை வெளியில் சொல்லவில்லை. இதனால் தயவு செய்து யாரும், பொய்யான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூல் சுரேஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











