Cool Suresh: இங்க நான் தான் கிங்கு.. வந்து சாப்பிடுங்க நுங்கு.. அலப்பறையை கிளப்பிய கூல் சுரேஷ்!
சென்னை: நடிகர் சந்தானத்தின் இங்கு நான் தான் கிங்கு படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனை முன்னதாக படக்குழுவினர் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். இன்றைய தினம் படம் வெளியாகி பாசிட்டிவ்வான கமெண்ட்களை பெற்று வருகிறது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் சந்தானம் தன்னுடைய டைமிங் காமெடியில் கலக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
படத்தில் சந்தானத்துடன் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஆனந்த் நாராயணன். இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் கூல் சுரேஷ் பிரமோஷனில் ஈடுபட்டுள்ளார். வெயில் தணிந்து தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில் அவர் நுங்குடன் வந்து சந்தானத்தின் படத்திற்கு இங்கு கிங்கு, நுங்கு என்று ரைமிங்காக பேசி பிரமோஷனில் ஈடுபட்டுள்ளார்.

இங்க நான் தான் கிங்கு படம்: நடிகர் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் சந்தானம் தன்னுடைய டைமிங் காமெடி மூலம் அசத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் சந்தானத்துடன் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலசரவணன் உள்ளிட்டவர்களும் இணைந்து காமெடி கலாட்டா செய்துள்ளார். படத்தை ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ப்ரியாலா இணைந்துள்ளார்.
கூல் சுரேஷ் பிரமோஷன்கள்: முன்னதாக இந்தப் படத்திற்கு படக்குழுவினர் ஏராளமான பிரமோஷன்களை மேற்கொண்ட சூழலில் வழக்கம்போல காமெடி நடிகர் கூல் சுரேஷும் தன்னுடைய பங்கிற்கு பிரமோஷனை சிறப்பாக செய்துள்ளார். ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் திரையரங்க வாயிலில் இரவே வந்து முகாமிடும் கூல் சுரேஷ், காலையில் பல் துலக்குவதில் இருந்து அனைத்தையும் அங்கேயே செய்வதையும் விளம்பரப்படுத்தி தொடர்ந்து அந்த படம் குறித்த தன்னுடைய கருத்துக்களை வெளியிடுவார். வெந்து தணிந்தது காடு என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு தன்னுடைய பிரமோஷனை அந்த படத்திற்காக மேற்கொள்வது அவரது வாடிக்கை
சந்தானம் படத்திற்கு பிரமோஷன்: இந்நிலையில் தற்போது சந்தானத்தின் படததிற்கும் அவர் இத்தகைய பிரமோஷனை மேற்கொண்டுள்ளார். இந்த முறை வெந்து தணிந்தது காடு என்ற வாக்கியத்தை விட்டுவிட்டு கையில் நுங்கை எடுத்துள்ளார். இங்கு நான் தான் கிங்கு, வந்து சாப்பிடுங்க நுங்கு என்று அவர் பேசியுள்ளது ரசிகர்களிடையே சிரிப்பையும் ஒரு சிலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே சந்தானத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் கூல் சுரேஷ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு மாலையுடன் சென்று சந்தானத்தை சந்தித்து அந்த மாலையை தனக்கே போட வைத்து, பேட்டி கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதை ஒரு பிரமோஷனின்போது பேசிய சந்தானம் போட்டுடைத்திருந்தார்.
கூல் சுரேஷ் ரைமிங் பேச்சு: இந்நிலையில் தற்போது அவரது படத்திற்காக கிங்கையும் நுங்கையும் ரைமிங்காக வைத்து அவர் பிரமோஷனில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல பிள்ளையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆனாலும் சுசித்ராவுடன் தொடர்ந்து சண்டை போட்டதையும் பார்க்க முடிந்தது. சமீபத்தில் கன்னி படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற கூல் சுரேஷ், பெண் வேடத்தில் வந்திருந்தது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பேரரசு, கூல் சுரேஷை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











