Cool Suresh :பல் தேய்த்து ரசிகர்கள் மீது துப்பிய கூல் சுரேஷ்.. ரசிகர்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா?

சென்னை : நடிகர் கூல் சுரேஷ் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையில் அடுத்தடுத்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் அந்தப் படம் குறித்த விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் இவர் திரையரங்குகளில் சென்று பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ருத்ரன் படத்தின் முதல்நாள் முதல் ஷோவில் இவர் செய்துள்ள அட்ராசிட்டி தாங்காமல் ரசிகர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

Actor Cool suresh review about Rudhran movie with Tooth brush

ருத்ரன் குறித்து விமர்சித்த கூல் சுரேஷ் : நடிகர் கூல் சுரேஷ் சமீபகாலங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். ஒவ்வொரு படத்தின் முதல் நாள் மற்றும் முதல் ஷோவிற்கு ஒரு திரையரங்கத்திற்கு சென்று அந்தப்படம் குறித்த விமர்சனங்களை கூறுவது இவரது வாடிக்கையாக மாறியுள்ளது. குறிப்பாக நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக காணப்படும் இவர், வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் வரிகளை கூறிவிட்டு, குறிப்பிட்ட படத்தின் பெயரை சொல்லி, வணக்கத்தை போடு என்று இவர் கூறுவது தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்தது.

Actor Cool suresh review about Rudhran movie with Tooth brush

ஆனால் ஒரு சில படங்களின் பிரமோஷனுக்காக காலையிலோ, அல்லது முந்தின நாளோ, அந்த குறிப்பிட்ட திரையரங்கிற்கு சென்று, அங்கேயே தூங்கிவிட்டு மறுநாள் காலையில், பிரஷ்ஷுடனேயே, மீடியாவிற்கு பேட்டி அளிப்பதையும் இவர் தனது ஸ்டைலாக பின்பற்றி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தின் பிரமோஷனுக்காக காலையிலேயே டூத்பிரஷுடன் மீடியாவை சந்தித்தார்.

அப்போது வெந்து தணிந்தது காடு, ருத்ரனுக்கு வணக்கத்தை போடு என்று தன்னுடைய வழக்கமான டயலாக்கை பேசிவிட்டு, ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ், இறுதியில் விருது வாங்குவது போன்ற காட்சி வருவதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் அவர் எப்போதோ இந்த விருதை வாங்கி விட்டதாகவும் பாராட்டினார். பலருக்கு வாழ்க்கையை அளித்துவரும் லாரன்சின் செயல்களையும் கூல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.

Actor Cool suresh review about Rudhran movie with Tooth brush

முன்னதாக டூத்பிரஷ்ஷின் எச்சிலை மேல்நோக்கி துப்பினார். இதையடுத்து அங்கிருந்த ரசிகர்களும், மீடியா நபர்களும் தெறித்து ஓடினர். இதேபோல அவர் அடுத்தடுத்து செய்த நிலையில், அவர் வாய் கொப்பளிக்கவும் அவருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. வாய் கொப்பளித்த தண்ணீரையும் மீண்டும் அவர் மேல் நோக்கி துப்பிய நிலையில், அதுவும் அருகில் இருந்தவர்கள் மீது பட்டதால். அருகில் இருந்தவர்கள் அனைவரும் அருவருப்படைந்தனர்.

மேலும் படத்தின் முதல் பாடல் குறித்தும் பாராட்டிய கூல் சுரேஷ், கெட்ட வார்த்தையை பிரயோகித்து, அந்தப் பாடலில் திரையரங்கமே ஆடுவதாகவும் பாராட்டியுள்ளார். இறுதிப்பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளையும் சிலாகித்த கூல் சுரேஷ், அதையும் தன்னுடைய ஸ்டைலில் கெட்ட வார்த்தைகளை பிரயோகித்தே பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீண்டும், மனிதர்கள் மத்தியில் லாரன்ஸ் அவார்ட் வாங்கிவிட்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X