இனி உலகநாயகன் சிம்பு தான்.. பரமசிவன் பாத்திமா இசைவெளியீட்டுவிழாவில் கூல் சுரேஷ் பேச்சு!
சென்னை: 'குடிமகன்', 'பெட்டிக்கடை', 'பகிரி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இசக்கி கர்வண்ணன் இயக்கி இருக்கும் திரைப்படம் 'பரமசிவன் பாத்திமா'. நடிகர் விமலின் 34-வது திரைப்படமான இப்படத்தில் சாயாதேவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, கூல் சுரேஷ், காதல் சுகுமார், அதிரா, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி படத்திற்கு இசையமைத்து இருக்கும் இப்படம் காதலுக்கு மதங்கள் எப்படி தடையாக இருக்கிறது என்பதை பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் கூல் சுரேஷ், கடவுள் பரமசிவன் வேடத்தில் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து இருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை, நடிகர் கூல் சுரேஷ் " பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது சீமான் சௌக்கியமா" என்று பாட்டுப்பாடி வரவேற்றார். மேலும், சீமான் என்றால் எழுச்சி... கூல் சுரேஷ் என்றால் குளிர்ச்சி... நாம் தமிழருக்கு உண்டு வளர்ச்சி என்றார். நான் ஏன் சீமானை புகழ்ந்து பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த பரமசிவன் பாத்திமா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு தகுதியானவர், அண்ணன் சீமான் அவர்கள் மட்டும் தான். தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, 234தொகுதிகளிலும் சரி சமமாக பெண் வேட்பாளர்கள் 117, ஆண் வேட்பாளர்கள் 117 என சரிசமமாக வேட்பாளர்களை நிறுத்தியவர் அண்ணன் சீமான் தான் என்றார்.

சிம்புக்கு நான் போட்டியா: பரமசிவன் பாத்திமா திரைப்படம் ஜூன்5ந் தேதி வெளியாகும் என இயக்குனர் கூறியதும், நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் அன்று, நான் தலைவன் சிம்பு நடித்த தக் லைஃப் திரைப்படம் வெளியாகிறது. இதனால் கமலுக்கும் விமலுக்கும் போட்டியா? என்றேன். இயக்குநர் இல்லை என்றார். அப்பொழுது, சிம்புக்கும் கூல் சுரேசுக்கும் மோதலா என்றேன் அதுவும் இல்லை என்றார். இதையடுத்து, நான் இயக்குநரிடம் தாழ்மையான வேண்டுகோள் வைத்தேன். அதாவது, ஜூன் 5ந் தேதி என் தலைவன் எஸ்.டி.ஆர் அவர்களின் திரைப்படம் வெளியாக இருப்பதால், அதற்கு, அடுத்த நாள் அதாவது ஜூன் 6ந் தேதி படத்தை வெளியிடலாம் என்றேன். அவரும் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இதனால், பரமசிவன் பார்த்திமா படம் ஜூன் 6ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. நான் சிம்புக்கு போட்டி இல்லை இருந்தாலும், என் தலைவனை நான் எப்போதும் தலையை உயர்த்தி தான் பார்க்க வேண்டும் என்றார்.
இனி உலகநாயகன் சிம்பு : இதைத்தொடர்ந்து பேசிய, கூல் சுரேஷ், கமல் சார் உலக நாயகனாக இருந்து இப்போது விண்வெளி நாயகனாக மாறி இருக்கிறார். இதனால், உலக நாயகன் பட்டம் தற்போது வெற்றிடமாக இருப்பதால், என் தலைவன் சிம்பு அவர்களுக்கு உலக நாயகன் பட்டத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று முதல் உலக நாயகன் என்றால் அது சிலம்பரசன்... விண்வெளி நாயகன் என்றால் அது கமலஹாசன் என்று கூல் கூரேஷ் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











