கூல் சுரேஷ் பேச வாங்க எனக் கூறிய தொகுப்பாளினி.. நான் யார்னு தெரியுமா என பட்டியலிட்ட கூல் சுரேஷ்!
சென்னை: சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், படத்தில் நடித்துள்ள கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விசிக தலைவர் திருமாவளவன் தொகுத்து வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசினார். இந்த நிழச்சியில் கூல் சுரேஷ் பேசுவதற்காக அவரை மேடைக்கு அழைத்த தொகுப்பாளினி, ” எத்தனையோ படங்களின் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்திருக்கின்றோம். அப்படி படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் இவர் என்ன சொல்வார் என படக்குழுவே காத்திருக்கும். கூல் சுரேஷ் அவர்களை பேச அழைகின்றோம் எனக் கூறி வரவேற்றார்.

மேடைக்கு பேச வந்த கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம், உங்களது பெயர் என்ன எனக் கேட்டுத் தெரிந்து கொண்டு, நீங்கள் கூல் சுரேஷ் அவர்கள் பேசுவார்கள் என சாதாரணமாக கூறிவிட்டீர்கள். அடுத்த முறை கூப்பிடும்போது யூட்டூப் சூப்பர் ஸ்டார், வெள்ளிக்கிழமை நாயகன், சி.எஸ்.கே கட்சியின் தலைவர் கூல் சுரேஷ் கட்சியின் தலைவர் நடிருமாகிய கூல் சுரேஷ் அவர்களை பேச அழைக்கின்றோம் எனச் சொல்லி கூப்பிடுங்கள். எதற்காக இதைச் சொல்கின்றேன் என்றால் மேடையில் பெரிய தலைவர்கள் இருகின்றார்கள்.
C.S.K தலைவர்: அவர்களுடன் எனக்கு இதற்கு முன்னர் அறிமுகம் இல்லை. இந்த நேரத்தில் அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனென்றால் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதற்காக கூறினேன். எதற்காக கூல் சுரேஷ் கட்சி என மீண்டும் இங்கு கூறுகின்றேன் என்றால் 2026இல் தொல். திருமாவளவன் ஐயாவுடன் நான் கூட்டணி வைக்கலாம், அண்ணன் வேல் முருகன் அவர்களுடன் கூட்டணி வைக்கலாம், ஐயா முத்தரசன் அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் எனக் கூறினார்.
பிக்பாஸ்: மேலும் தனது பேச்சில், “நான் பிக்பாஸ் போய்ட்டு வந்தது எல்லாருக்கும் தெரியும். இப்போ கமல் சார் பிக்பாஸில் இருந்து விலகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். கமல் சார் பிக்பாஸில் இருந்து விலகியாதால், அடுத்து யாரை தொகுத்து வழங்கச் சொல்லலாம் என்ற பேச்சு மிகத்தீவிரமாக போய்க்கொண்டு உள்ளது. எனக்கும் விஜய் டீவிக்கும் இன்னும் தொடர்பு இருக்கு என்பது பலருக்குத் தெரியும்.
திருமாவளவன்: விஜய் டீவியில் மிகவும் முக்கியமான பொறுப்பில் உள்ளவரிடம் நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவரிடம் அடுத்து யார் பிக்பாஸை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என நான் கேட்டேன். அதற்கு, அவர், தொல். திருமாவளவன் சார் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். எதற்காக இப்படிச் சொல்கின்றீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் கூறினார். தொல். திருமாவளவன் சாரிடம் நீதி இருக்கும், நேர்மை இருக்கும், உண்மை இருக்கும். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கும் தில் திருமாவளவன் சாரிடம் உள்ளது.
கமல்: இது நடைமுறைக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவுமே, ஏன், சட்டத்தை எழுதிய அம்பேத்கரே தனது மாணவன் உலகமே கவனிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்று எழுந்து நின்று கைத்தட்டுவார். உலகமே பார்க்கும் நிகழ்ச்சியில் தவறு நடந்தால் அதனை தட்டிக் கேட்கும் தில் வேண்டும். நான் தில் வேண்டும் எனக் கூறிவிட்டேன் என கமல் சாருடன் இதனை கோர்த்து பேசிவிடாதீர்கள். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கமல் சார் மிகவும் நல்லவர்தான். இது விஜய் டீவியில் அவர்கள் கூறியதைக் கூறினேன்” எனப் பேசினார்.


Click it and Unblock the Notifications











