வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
சென்னை: சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர் சிஆர் பார்த்திபன் காலமானார். அவருக்கு வயது 90.
1959ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் என பலரும் நடித்திருந்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பேசும் படமாக இந்த படம் இருந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற எதற்கு கட்ட வேண்டும் கிஸ்தி என்ற டயலாக் பெரும் பிரபலமானது.
இப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர் பழம் பெரும் நடிகர் சிஆர் பார்த்திபன். இந்நிலையில் பழம் பெரும் நடிகர் சிஆர் பார்த்திபன் இன்று காலமானார்.
90 வயதான சிஆர் பார்த்திபன் வயது முதிர்வு பிரச்சனைகளால் உயிர் நீத்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











