Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
"கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்
சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 36.
Recommended Video
தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்டி படித்துள்ளார். தோல் சிகிச்சை நிபுணர். பல்வேறு மருத்துவம் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
தோல், முடி பிரச்சினைகளுக்கு ஏராளமான தீர்வுகளை யூடியூப் மூலம் வெளியிட்டுள்ளார். இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துவார்.
இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் தோல் நோய்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டுள்ளார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
காமெடி நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் 3 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். பின்னர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளர் உமையாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் நள்ளிரவு 12 மணி அளவில் மாரடைப்பால் காலமானார். இவரது வீடு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் அருகே உள்ள அபார்மென்ட்டில் உள்ளது.
அதே அபார்ட்மென்ட்டில் நடிகர் சதீஷும் வசித்து வருகிறார். சேதுராமன் மறைவு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் சதீஷ்.