இயக்குனர் போஸ் வெங்கட்டின் தாய் ராஜாமணி காலமானார்.. நாளை இறுதி சடங்குகள் என அறிவிப்பு!
சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட்டின் Sir படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. முன்னதாக கன்னிமாடம் என்ற படத்தை இவர் இயக்கியுள்ள நிலையில் அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில் அவரது இரண்டாவது படமான Sir இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. படத்தில் நடிகர் விமல் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.
இதனிடையே இன்று மாலை இயக்குநர் போஸ் வெங்கட்டின் தாய் ராஜாமணி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது வயது 83. இவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான அறந்தாங்கியில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் போஸ் வெங்கட்: நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட் சின்னத்திரை மட்டுமில்லாமல் சினிமாவிலும் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கன்னிமாடம் என்ற படத்தின்மூலம் இவர் இயக்குநராக தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், இன்றைய தினம் விமல் லீட் கேரக்டரில் நடித்துள்ள Sir படம் போஸ் வெங்கட் இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. படத்தில் நடிகர் சரவணன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். சித்து குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
போஸ் வெங்கட் தாய் மறைவு: இன்றைய தினம் போஸ் வெங்கட்டின் இரண்டாவது படமாக Sir படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகியுள்ள நிலையில், அதை அவர் கொண்டாடுவதற்கு முன்னதாக அவரது வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது. அவரது தாய் ராஜாமணி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83. அவரது இறுதி சடங்குகள், போஸ் வெங்கட்டின் சொந்த ஊரான அறந்தாங்கியில் நாளை மாலை நடக்கவுள்ளதாக போஸ் வெங்கட் குடும்பத்தினர் தரிவித்துள்ளனர். இதனிடையே போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
உண்மை சம்பவங்களின் கதை: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியின் அவசியத்தை புரிய வைக்கும்வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாக முன்னதாக போஸ் வெங்கட் கூறியிருந்தார். தான் சிறுவயதில் பார்த்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தை இயக்கியதாகவும் அவர் கூறியிருந்த நிலையில், இந்தப் படத்தின் பிரமோஷன்களில் நடிகர் விமல் பங்கேற்காதது மிகப்பெரிய விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.

சமூக பிரச்சினை: இருந்தபோதிலும் இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டிருந்தார் இயக்குநர் போஸ் வெங்கட். படத்தில் அதே அடக்குமுறை கதைக்களத்தை இயக்குநர் கையிலெடுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. தீபாவளி ரிலீஸ் படங்கள் அடுத்தடுத்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துவரும் நிலையில், இந்த வாரம் சார் படம் சிறப்பான கவனத்தை பெற்று ரிலீசானது. இந்நிலையில் சமூக பிரச்சினையை கையில் எடுத்து போஸ் வெங்கட் கொடுத்துள்ள இந்தப் படத்தில் சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் விமலின் நடிப்பை வாகை சூடவா படத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் படம் ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது போஸ் வெங்கட் தாய் மறைவு அவரை முடக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











