Actor Dhanush: ராயன் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் ரிலீஸ்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் அடுத்தடுத்து டி50 மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் உருவாகியுள்ளன. இதில் டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அடுத்தடுத்து படத்தின் நடிகர்களின் போஸ்டர்களை நடிகரும் படத்தின் இயக்குநருமான தனுஷ் வெளியிட்டு வருகிறார். இவை அனைத்துமே ரசிகர்களை கவரும் வகையில் கருப்பு வெள்ளை லுக்கில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இளைஞர்களை மையமாக கொண்டு உருவாக்கியுள்ள தனுஷ், இந்தப் படத்தின் சூட்டிங்கை 70 சதவிகிதம் நிறைவு செய்துவிட்டு தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது டி51 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் தற்போது டி51 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் துவங்கப்பட்டு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் தனுசுடன் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றனர். முன்னதாக கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரு படங்களை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இதில் அவரது ஐம்பதாவது படமாக உருவான டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த போஸ்டர்கள்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அறிவித்திருந்தார் தனுஷ். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் மற்ற கேரக்டர்களையும் கேரக்டர் போஸ்டர்கள் மூலம் அறிமுகம் செய்து வருகிறார். அந்த வரிசையில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் என தினந்தோறும் அடுத்தடுத்த கேரக்டர்களை அவர் அறிமுகம் செய்து வருகிறார். இந்த போஸ்டர்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ளன.
ரசிகர்கள் கேள்வி: தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவருடன் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் இருவரும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் படத்தில் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்கள் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் இப்படி அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது இதுகுறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்குமே முக்கியத்துவம் கொடுத்து இயக்கி உள்ளாராம் தனுஷ். அந்த வகையில் ஒவ்வொருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அழுத்தமான கேரக்டரில் துஷாரா விஜயன்: துஷாரா விஜயனுக்கு இந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பா பாண்டி படத்துக்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து இந்த படத்தை தனுஷ் இயக்கி உள்ள நிலையில் படம் அழுத்தமான கதைக்களத்துடன் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் மற்றும் ஃபேமிலி சென்டிமெண்டை சேர்த்து இந்த படத்தின் கதைக்களத்தை தனுஷ் அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படும் நிலையில் விரைவில் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











