நயன்தாரா பற்றி தெரியாமல் பேசிவிட்டேன்..ரசிகர்கள் ஆத்திரத்தால் ஜகா வாங்கிய நடிகர்!

மும்பை : நயன்தாரா குறித்து காபி வித் கரண் நிகழ்ச்சியில் கரண் ஜோஹர் அடித்த கமெண்ட் நயன்தாரா ரசிகர்களை கோபம் கொள்ள செய்துள்ளது.

இதையடுத்து கரண் ஜோகருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவர்கள் கோபமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையடுத்து தான் செய்த கமெண்ட்டிலிருந்து கரண் ஜோஹர் பின்வாங்கியுள்ளார்.

பன்முக திறமையாளர் கரண் ஜோஹர்

பன்முக திறமையாளர் கரண் ஜோஹர்

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், காஸ்ட்யூம் டிசைனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோகர். இவரது பல படங்கள் பாலிவுட்டில் சிறப்பாக அமைந்தவை. இவர் தொகுத்துவழங்கிவரும் காபி வித் கரண் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

 காபி வித் கரண் நிகழ்ச்சி

காபி வித் கரண் நிகழ்ச்சி

டிவியில் பல ஷோக்களை இவர் இதுபோல தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியை மீண்டும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடியது வைரலானது.

சமந்தா -அக்ஷய் நடனம்

சமந்தா -அக்ஷய் நடனம்

நிகழ்ச்சியில் சமந்தாவை தூக்கிக் கொண்டு அவர் வந்ததும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் அக்ஷய் இருவரிடமும் பல கேள்விகளை கரண் ஜோஹர் கேட்டார். அவர்களும் உற்சாகத்துடன் பதிலளித்தனர். அப்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகை என்று யாரை நினைக்கிறீர்கள் என்று கரண் சமந்தாவிடம் கேட்டார்.

நயன்தாரா குறித்து கரண் ஜோஹர் கமெண்ட்

நயன்தாரா குறித்து கரண் ஜோஹர் கமெண்ட்

அதற்கு நயன்தாரா என்று சமந்தா பதிலளித்தார். அதற்கு பதிலளித்த கரண் ஜோஹர், தாங்கள் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் நயன்தாரா பெயர் இல்லை என்று கூறினார். இந்த பதிலால் கடுப்பான நயன்தாரா ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கரண் ஜோஹருக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஆத்திரம்

ரசிகர்கள் ஆத்திரம்

தற்போது ஷாருக்கானுடன் நயன்தாரா பாலிவுட்டில் நடித்து வருகிறார். மேலும் அவரது கோலமாவு கோகிலா படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு அதில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இந்த அளவில் பிரபலமாகியுள்ள நயன்தாரா குறித்த கரண் ஜோஹர் கமெண்ட் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கரண் ஜோஹர் விளக்கம்

கரண் ஜோஹர் விளக்கம்

இதையடுத்து நயன்தாரா ரசிகர்களை சமாதானப்படுத்தும்வகையில் கரண் ஜோஹர் தற்போது தன்னுடைய செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆர்மேக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து தனக்கு கிடைத்துள்ள பட்டியல்படி சமந்தாதான் நம்பர் ஒன் ஸ்டார் என்றுதான் தான் கூறியதாகவும் அதை ரசிகர்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாவுட்டில் கால்பதித்த நயன் -சமந்தா

பாவுட்டில் கால்பதித்த நயன் -சமந்தா

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்திருந்த சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளனர். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள நிலையில், அக்ஷயுடன் சமந்தா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X