Pradeep: பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு கூட்டணியில் வெளியான கோமாளி படம் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார் பிரதீப் ரங்கநாதன். கோமாவில் சில ஆண்டுகள் இருக்கும் படத்தின் ஹீரோ மீண்டும் நினைவு திரும்பிய நிலையில் அவர் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்களை மையமாகக் கொண்டு இந்த படம் காமெடி தூக்கலாக உருவாகியிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் பிளஸ் நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் இவானா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். காதலும் காதல் நிமித்தமும் என்ற கதைக்களத்தில் இந்த படம் வெளியானது.
காதலர்கள் இடையில் ஈகோ பிரச்சனையும் சந்தேகமும் தலைதூக்கக் கூடாது என்பதை இந்த படம் கதைக்களமாக சிறப்பான திரைக்கதையுடன் கொடுத்திருந்தது. இந்தப் படம் வெளியாகி பிரதீப் ரங்க நாதனை கோலிவுட்டில் உயரத்தில் தூக்கி வைத்தது. இதனால் அவரது மார்க்கெட் வேல்யூ மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன்: நடிகர் பிளஸ் இயக்குனர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்ற படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைந்து சிறப்பான கதைக்களத்தை கொடுத்திருந்தார் பிரதீப். இந்தப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஜெயம் ரவிக்கும் இந்த படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்தப்படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த சூழலில் படம் பிரதீப் ரங்கநாதனுக்கு சிறப்பான என்ட்ரியாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக நடித்து படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே படம்: காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் ஈகோ மற்றும் சந்தேகம் உள்ளிட்ட பிரச்சினைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்தப் படம் பிரதீப் ரங்கநாதன் கேரியரில் மிகப்பெரிய பெஸ்ட் படமாக அமைந்தது. வசூலும் பின்னி பெடல் எடுத்தது. இதனால் கோலிவுட்டில் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ மிகப் பெரிய அளவில் உயரத்தை கண்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விறுவிறு எல்ஐசி சூட்டிங்: விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ளதாகவும் படம் இந்த ஆண்டிலேயே வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் கமிட்டாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தையும் தயாரிக்கவுள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், 5000 கோடி ரூபாயை கோலிவுட்டில் களமிறக்க உள்ளதாகவும் அடுத்தடுத்த 12 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 12 படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படமும் ஒன்று என்பது தற்போது நிறைவு கட்ட பேச்சு வார்த்தையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்சுடன் இணையும் பிரதீப்: இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு 10 கோடி ரூபாய்கள் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் எல்ஐசி படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் கிருத்தி ஷெட்டி. மேலும் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, கௌரி கிஷன் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்சுடன் இணையவுள்ள படத்தை அவரே இயக்குவாரா அல்லது நடிப்புடன் நிறுத்திக் கொள்வாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











