ஹீரோவுக்கான அத்தனை தகுதியும் உனக்கு இருக்கு-துருவ்வை பாராட்டிய ப்ரித்விராஜ்

Recommended Video

vikram speech at Adhithya varma audio launch

சென்னை: அறிமுக நாயகனுக்கான தோற்றத்துடன் கனகச்சிதமாக உள்ளார் என்று ஆதித்யா வர்மா திரைப்படத்தில் நடிகர் துருவ்வை நடிகரும் இயக்குநருமான ப்ரித்விராஜ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

படத்தின் முன்னோட்டத்தை பார்த்து திரையுலக பிரமுகர்கள் பலரும் துருவ்வை பாராட்டி உள்ளனர். அதேபோல் விக்ரமின் நெருங்கிய நண்பரான ப்ரித்விராஜும் துருவைவை பாராட்டியுள்ளார்.

Actor Cum Director Prithviraj Praised Actor Dhruv

ப்ரித்விராஜ் கடைசியாக தமிழில் ராவணன் படத்தில் சியான் விக்ரமுடன் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவர் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் நடிக்கவும், படங்களை இயக்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய லூசிஃபர் திரைப்படம் அமோக வெற்றிபெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் முதல் இடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது ப்ரித்விராஜ் சாஜு கைலாஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ப்ரித்விராஜின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ப்ரித்விராஜ் மலையாள சினிமா மட்டுமின்றி ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். சமீபத்தில் கூட இந்தி படமான நாம் ஷபனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு காலத்தில் வெற்றி படம் தந்த நாயகன் ப்ரித்விராஜ். மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ராவணன் படத்திற்கு பிறகு நடிக்கவில்லை.

தமிழில் மீண்டும் ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.

தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த அர்ஜீன் ரெட்டி படம் தமிழில் சியான் விக்ரம் மகன் துருவ்வை வைத்து வர்மா என்ற பெயரில் பாலா இயக்கத்தில் தயாரிக்கப்பட்டது. அந்த படம் தயாரிப்புநிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டு கிரிசாயாவை வைத்து ஆதித்யா வர்மா என்று எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் முன்னோட்டத்தை பார்த்து பலரும் துருவ்வை பாராட்டி உள்ளனர். இதற்கிடையில் விக்ரமின் நண்பரான ப்ரித்விராஜ் துருவ்வை பாராட்டி உள்ளார். துருவ் அறிமுக நாயகனுக்கான தோற்றத்துடன் கனகட்சிதமாக உள்ளார் என்று பாராட்டியுள்ளார் ப்ரித்விராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X