Prithviraj sukumaran: ஆடு ஜீவிதம் படத்தின் அதிரிபுதிரி வெற்றி.. அடுத்ததாக இயக்கத்திற்கு தாவிய பிரத்விராஜ்!
சென்னை: நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் ஆடுஜீவிதம். பிரபல மலையாள பட இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியான இந்த படம் முன்னதாக 16 ஆண்டுகள் காத்திருப்பு மற்றும் முயற்சிக்குப் பின்பு வெளியாகி உள்ளது. இந்தப்படம் வெளியாகி தற்போது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள சூழலில் படம் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரித்விராஜின் மார்க்கெட் வேல்யூ தற்போது இந்திய அளவில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அவர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டு, அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது எம்புரான் படத்தை இயக்க களம் இறங்கியுள்ளார். முன்னதாக லூசிபர் மற்றும் ப்ரோ டாடி படங்களை இயக்கி வெற்றிப்படங்களாக கொடுத்த பிரித்விராஜின் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகவுள்ளது எம்புரான் படம்.

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பிரிதிவிராஜ் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் மாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் திரைத்துறையில் பயணித்து வரும் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டில் சலார் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை சர்வதேச அளவில் கட்டிப்போட்டுள்ளது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இயக்கத்திற்கு தாவிய பிரித்விராஜ்: தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரிதிவிராஜ் மார்க்கெட் வேல்யூ மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அவர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி, அடுத்தடுத்த படங்களில் நடித்து கல்லா கட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அடுத்ததாக லூசிபர் 2 படத்தை இயக்க கிளம்பியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான லூசிபர் மற்றும் ப்ரோ டேடி படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கடந்த ஆண்டிலேயே எல்2 :எம்புரான் படத்தை தான் இயக்க உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டில் துவங்கிய சூட்டிங்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் வெளியான லூசிபர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாவது பாகமாக எம்புரான் படம் உருவாகி வருகிறது. கடந்த மாதத்தில் படத்தில் மோகன்லாலின் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது. கருப்பு நிற ஜாக்கெட் அணிந்தபடி தன்னுடைய பின்புறத்தை காட்டும் மோகன்லாலின் இந்தப் போஸ்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் நடந்தப்பட்டது.. படத்தின் முதல் பாகத்தில் டொவினோ தாமசும் முக்கியமான ரோலில் நடித்திருந்த நிலையில் தற்போது எம்புரான் படத்திலும் அவர் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதையொட்டி அவரும் அமெரிக்காவில் நடந்த சூட்டிங்கில் பங்கேற்றார். படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











