Ajith :ஷாலினியை காதலிக்க வேண்டாம் என்று சொன்ன ரமேஷ் கண்ணா.. அஜித் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை : நடிகர் அஜித்தின் தொடரும் படத்தை இயக்கியவர் இயக்குநர் ரமேஷ் கண்ணா.
அஜித்துடன் இணைந்து அமர்க்களம், வில்லன் ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட காலத்திற்கு பிறகு அஜித் -சிவா கூட்டணியில் வெளியான வீரம் படத்திலும் ரமேஷ் கண்ணா நடித்திருந்தார்.

ஷாலினியை காதலிக்க வேண்டாம் என்று அஜித்திற்கு அட்வைஸ் சொன்ன ரமேஷ் கண்ணா : நடிகர் அஜித் தன்னை தூக்கி விட்டவர்களை எப்போதும் மறக்காதவர், தொடர்ந்து அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துபவர். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணாவுடன் அவர் தொடர்ந்து சிறப்பான ரிலேஷன்ஷிப்பில் தற்போதும் காணப்படுகிறார். எவர்கிரீன் பிரெண்ட் ஆப் அஜித் என்று ரமேஷ் கண்ணா போற்றப்பட்டவர். அவரின் தொடரும் படத்தை இயக்கியவர். அவரை குடும்பப் பாங்காக காட்டிய படங்களில் தொடரும் படத்திற்கு முக்கிய இடம் உண்டு.
அஜித், தேவயானி, ஹீரா என லீட் கேரக்டர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் 80 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்துடன் பல படங்களில் இணைந்து ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். காதல் மன்னன் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் அஜித்துடன் ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். தொடர்ந்து உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து அஜித் -ரமேஷ் கண்ணா காம்பினேஷன் ஹிட்டடித்தது. அமர்க்களம், வில்லன், ஆஞ்சனேயா, அட்டகாசம், வரலாறு உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் இணைந்து ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். நீண்ட காலங்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியான வீரம் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு கொடுத்ததே அஜித்தான் என்று படத்தின் இயக்குநர் சிவா, ரமேஷ் கண்ணாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியில் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரமேஷ் கண்ணா, அமர்க்களம் படத்தில் அவரது காதல் கதை குறித்து பேசினார். அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அந்தப் படத்தின்போது கண்களாலேயே பேசிக் கொண்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும் ஆனால் தான் அஜித்திடம், சினிமாவில் இருக்கும் பெண்ணை மட்டும் லவ் செய்து திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம் என்று அட்வைஸ் செய்ததாக தெரிவித்துள்ளார்.

பலரது சினிமா காதல் பெயிலியர் ஆவதால், பொதுவாக தான் அஜித்திற்கு இந்த அட்வைசை கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இதைப் பார்த்த படத்தின் இயக்குநர் சரண், தன்னை பர்சனலாக கூப்பிட்டு, அவர்கள் இருவரும் காதலிப்பதை தன்னிடம் கூறியதாகவும், இதையடுத்து வாயை மூடியவன்தான் பிறகு திறக்கவே இல்லை என்றும் குறிப்பிட்டார். இதனிடையே தான் கொடுத்த அட்வைசை கேட்டு அஜித் புன்னகை செய்ததாகவும் தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்ததாகவும் ரமேஷ் கண்ணா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











