காந்தாரா பட இயக்குநரின் கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்.. நெகிழ்ந்த ரிஷப் ஷெட்டி!
சென்னை : நடிகர் ரிஷப் ஷெட்டி, கிஷோர், சப்தமி கௌடா, மானசி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது காந்தாரா.
இந்தப் படம் ஆரம்பத்தில் மெதுவாகவே தன்னுடைய பயணத்தை துவக்கியது. தொடர்ந்து இந்தப் படத்திற்கான வரவேற்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
இந்தப் படத்தை கேஜிஎப் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

காந்தாரா படம்
ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி கன்னட மொழியில் வெளியானது காந்தாரா. இந்தப் படம் வெளியான சில நாட்கள் அந்த அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தொடர்ந்து இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சிறப்பான வரவேற்பு
கேஜிஎப் பாகங்களை தயாரித்த ஹம்பாலே நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. கேஜிஎப் படங்களுக்கு இணையான வரவேற்பை இந்தப் படமும் தற்போது பெற்றுள்ளது- இந்தப் படத்திற்கு கன்னடத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த மொழிகளில் ரிலீஸ்
பான் இந்தியா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருப்பதால் தற்போது அடுத்தடுத்த மொழிகளில் படம் ரிலீசாகி வருகிறது. இந்தப் படத்தை பார்க்கும் பிரபலங்கள் பலரும் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கருக்கு உகந்த படம்
இந்தப் படம் ஆஸ்கருக்கு தகுந்தது என்றும் இந்தப் படத்தின் மேக்கிங் அந்த அளவிற்கு தகுந்த அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரில் #Kantarafor Oscars என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

ரஜினிகாந்த் பாராட்டு
இதனிடையே இன்றைய தினம் படத்தை பார்த்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இதுகுறித்து படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தெரிந்தவர்களை காட்டிலும் தெரியாதவர்களே அதிகம் என்றும் இந்த விஷயத்தை காந்தாராவை விட வேறு யாரும் அழகாக காட்டவில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு நன்றி சொன்ன ரிஷப் ஷெட்டி
எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராக ரிஷப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், தலைசிறந்த படைப்பை கொடுத்துள்ள நடிகர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதனிடையே ரஜினியின் இந்த வாழ்த்திற்கு இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ரஜினியின் ரசிகன்
அன்புள்ள ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்றும் நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் ரசிகன் என்றும் ரிஷப் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் பாராட்டு தனது கனவு என்றும் மேலும் மண்சார்ந்த கதைகளை செய்ய ரஜினி தன்னை தூண்டுவதாகவும் ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











