Kantara 2: பூஜையுடன் துவங்கும் காந்தாரா 2 படத்தின் சூட்டிங்.. எப்ப தெரியுமா?
பெங்களூர்: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஹீரோவாக களமிறங்கிய படம் காந்தாரா. படத்தை அவரே இயக்கியிருந்தார்.
ஹம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியானது.

16 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய்களை வசூலித்து சாதனை புரிந்தது.
நடிகர் -இயக்குநர் ரிஷப் ஷெட்டி: நடிகர் ரிஷப் ஷெட்டி ஹீரோவாக நடித்து இயக்கிய படம் காந்தாரா. சர்வதேச அளவில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருந்த இந்தப் படம் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. ஹம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் 400 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் பெற்று சாதனை படைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
காந்தாரா 2 படம்: இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து முன்னதாக அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கை முன்னதாக ரிஷப் ஷெட்டி துவங்கிய நிலையில் படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்தின் பூஜை நவம்பர் 27ம் தேதி துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 27ம் தேதி பூஜை: நவம்பர் 27ம் தேதி படத்தின் பூஜை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் சூட்டிங் டிசம்பர் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த காந்தாரா படத்தின் முன் வரலாற்றை கூறும்வகையில் காந்தாரா 2 உருவாக்கப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ரிஷப் ஷெட்டி: இந்தப் படத்திற்காக அதிகமான அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ரிஷப் ஷெட்டி கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாகவும் படம் 300 -400 ஆண்டுகளின் காலக்கட்டத்தையொட்டி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழைக்காலத்தையொட்டிய கதைக்களம் என்பதால் ஆகஸ்ட் மாத இறுதியில் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங், அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது.
அடுத்த ஆண்டில் காந்தாரா 2 ரிலீஸ்: காந்தாரா 2 படத்தின் சூட்டிங்கை விரைவு படுத்தி அடுத்த ஆண்டில் படத்தை ரிலீஸ் செய்யவும் ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளார். முன்னதாக வெளியான காந்தாரா படம் பார்ட் 2 என்றும் தற்போது உருவாகவுள்ள காந்தாரா 2 படமே பார்ட் 1 என்றும் அவர் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் வெளியான காந்தாரா படம் காடுகளில் வாழும் சிறிய சமூகத்தினரின் வாழ்வியலை எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











