Don't Miss!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- News
2024 தேர்தல் தான் குறியே.. பக்கா பிளானோடு பட்ஜெட்டை ‛பாஸ்’ செய்த பாஜக.. பின்னணியில் இவ்வளவு விஷயமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Sports
ஹர்திக் பாண்டியாவை தலை குனிய வைத்த இஷான் கிஷன்.. பொறுமை இழந்த டிராவிட்.. நீக்கப்பட வாய்ப்பு
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆர்ஜே பாலாஜியின் அடுத்தப்படம் சிங்கப்பூர் சலூன்.. இந்த முறை ஒன்லி நடிப்பு மட்டும்தானாம்!
சென்னை : நடிகர், இயக்குநர், வீஜே, ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் என பன்முகங்களை கொண்டவர் ஆர்ஜே பாலாஜி.
இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
இவரது வீட்ல விசேஷம் வெளியாகி சில வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், தற்போது தன்னுடைய அடுத்தப்படத்தை அறிவித்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.
புது
கார்
வாங்கிய
பாலாஜி
முருகதாஸ்..பிக்
பாஸ்
அல்டிமேட்
சம்பளத்தில்
வாங்கியதா?

நடிகர் ஆர்ஜே பாலாஜி
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், வீஜே, ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் என பன்முகத் திறமையோடு கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. இதுவரை இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. இதையடுத்து தற்போது அடுத்தப் படத்தையும் அறிவித்துள்ளார்.

அரசியல் நையாண்டி
இவரது படங்களில் அரசியல் நையாண்டி கலந்து காணப்படுவது ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. முதல் படமான எல்கேஜியிலேயே சிறப்பான கதைக்களத்துடன் களமறங்கி ரசிகர்களையும் கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படத்தில் பிரியா ஆனந்த் இவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார். சாமானியனையும் முதல்வனாக மாற்றுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் யுத்திகள் இந்தப் படத்தில் பேசப்பட்டது.

நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படம்
தொடர்ந்து நயன்தாராவை லீட் கதாபாத்திரத்தில் வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் தலைப்பை பார்த்தவுடன் ஏதோ பக்தி பரவசத்துடன் எடுத்திருப்பார் என்ற நினைப்பில் போய் பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் சமூகத்தில் காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் சில விஷயங்களுக்கு நேரடியாகவே கவுண்டர் கொடுத்திருந்தார் ஆர்ஜே பாலாஜி.

சிறப்பான வீட்ல விசேஷம்
இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வீட்ல விசேஷம். இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பால முரளி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் வெளியானது.

அடுத்தப்பட அறிவிப்பு
தொடர்ந்து நாயகனாக நடித்து சிறப்பாக கவனத்தை ஈர்த்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில் இவரது வீட்ல விசேஷம் வெளியாகி சில வாரங்களே ஆன நிலையில், அடுத்த ப்ராஜக்ட்டை தற்போது அறிவித்துள்ளார். சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஷிவானி நாராயணன் ஜோடி சேர்ந்துள்ளார்.
Recommended Video

விரைவில் சூட்டிங்
இந்தப் படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.