twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுப்ரமணியபுரம் 14வது ஆண்டு கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த சசிக்குமார்!

    |

    சென்னை : நடிகர் மற்றும் இயக்குநர் சசிக்குமார் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியானது சுப்ரமணியபுரம்.

    இந்தப் படத்தின்மூலம் அவர் கோலிவுட்டிற்கு சிறப்பான தனது அறிமுகத்தை கொடுத்தார்.

    தொடர்ந்து சில படங்களை இயக்கினாலும் தற்போது நடிப்பிலேயே முழுவதுமாக கவனம் செலுத்தி வருகிறார்

    பொன்னியின் செல்வன் படவிழா தஞ்சையில் கிடையாதா...கோலிவுட்டையும் துரத்தும் கோயில் சென்டிமென்ட் பொன்னியின் செல்வன் படவிழா தஞ்சையில் கிடையாதா...கோலிவுட்டையும் துரத்தும் கோயில் சென்டிமென்ட்

    சுப்ரமணியபுரம் படம்

    சுப்ரமணியபுரம் படம்

    கடந்த 2008ல் ஜெய், சசிக்குமார், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் சுப்ரமணியபுரம். இந்தப் படத்தின்மூலம் சிறப்பான இயக்குநராகவும் நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் அறிமுகமானார் சசிக்குமார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

    அனுராக் காஷ்யப் பாராட்டு

    அனுராக் காஷ்யப் பாராட்டு

    படத்தின் காட்சி அமைப்புகள், திரைக்கதை உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்திருந்தன. இந்தப் படமே கேங்ஸ் ஆப் வாசேப்பூர் படத்தை எடுக்க தனக்கு உந்துதலாக அமைந்ததாக பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் படத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த அளவில் படத்தில், காதல், நட்பு, துரோகம் என அனைத்துமே சிறப்பாக காணப்பட்டது. கேங்ஸ்டர் படங்களில் ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்தது.

    ஜேம்ஸ் வசந்தன் இசை

    ஜேம்ஸ் வசந்தன் இசை

    படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. குறிப்பாக கண்கள் இரண்டால் பாடல் ரசிகர்களை கட்டிப் போட்டது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் 14 ஆண்டுகளை கடந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

    சசிக்குமார் மகிழ்ச்சி

    சசிக்குமார் மகிழ்ச்சி

    இயக்குநர் சசிக்குமாரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். ஜூலை 4 எப்போதுமே தனக்கு ஸ்பெஷல் என்று கூறியுள்ள சசிக்குமார். அன்றைய தினம் சுப்ரமணியபுரம் வெளியானதுதான் அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்களின் ஆதரவிற்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

    இயக்குநர் அவதாரம்

    இயக்குநர் அவதாரம்

    அத்துடன் விரைவில் ரசிகர்கள் ஒரு விஷயத்தை கேட்பீர்கள் என்றும் அது கண்டிப்பாக தனது அடுத்த அவதாரம் இயக்குநர் என்பதுதான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் சுப்ரமணியபுரம் படத்தின் போஸ்டர்களையும் இந்தப் பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். சசிக்குமாரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

    English summary
    Actor & Director Sasikumar wants to direct in his next
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X