twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுப்ரமணியபுரம் மாதிரி படத்தை மறுபடியும் எடுக்க முடியாது.. சசிக்குமார் வெளிப்படை!

    |

    சென்னை : இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் நடிப்பில் காரி படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

    ஜல்லிக்கட்டை மையமாக வைத்து காரி படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தின் பிரமோஷனையொட்டி பேசிய சசிக்குமார் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

    நடிகர் சசிக்குமார்

    நடிகர் சசிக்குமார்

    நடிகர் சசிக்குமார் சுப்ரமணியபுரம், குட்டிப்புலி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சிறப்பான நடிகராகவும் இயக்குநராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் தற்போது காரி என்ற படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    நாளை ரிலீசாகும் காரி படம்

    நாளை ரிலீசாகும் காரி படம்


    ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை இந்தப் படம் விமர்சிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தில் 18 வகையான காளைகள் மற்றும் 18 ஜல்லிக்கட்டு வீரர்களை கொண்டு நிஜ ஜல்லிக்கட்டையே படக்குழு நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தப் படத்தின் காட்சிகளை எடுக்க மிகுந்த சிரமப்பட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    குதிரைப்பந்தய ஜாக்கியாக சசிக்குமார்

    படத்தில் குதிரைப்பந்தய ஜாக்கியாக சசிக்குமார் நடித்துள்ளார். அவரின் பயிற்சியாளரான ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். குதிரைப்பந்தய ஜாக்கியான சசிக்குமார் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்கொள்ளும்போது சந்திக்கும் சவால்களை இந்தப் படம் கூறுகிறது. இந்நிலையில் தன்னுடைய சுப்ரமணியபுரம் படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட சசிக்குமார் அதுபோன்ற படத்தை தற்போது மீண்டும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

    காரி பத்திரிகையாளர் சந்திப்பு

    காரி பத்திரிகையாளர் சந்திப்பு

    இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த காரி படக்குழுவினர் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்தப படத்தில் ஜல்லிக்கட்டு முக்கியமான அம்சமாக அமைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் ஹேமந்த் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கையின் நுனியில் கொண்டுவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான விஷயங்கள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான விஷயங்கள்

    இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் யாருக்கும் எதிரான எந்த வசனங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இன்றும் கிராமங்களில் பாரம்பரிய அடிப்படையிலேயே தீர்வு காண முற்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட ஹேமந்த் ஜல்லிக்கட்டுக்கு நாம் என்ன செய்கிறோம், ஜல்லிக்கட்டு நமக்கு என்ன செய்கிறது என்பதை தன்னுடைய பார்வையில் காரி படத்தில் பதிவு செய்துள்ளதா தெரிவித்துள்ளார்.

    English summary
    Sasikumar's Kaari movie released tomorrow in theatres and sasikumar shared more about the movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X