சிம்பு திருமணம் எப்போது.. சென்னை திரும்பிய டி ராஜேந்தர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகரும் பிரபல இயக்குநருமான டி ராஜேந்தர்.

Recommended Video

America-விலிருந்து வந்ததும் T Rajendar சொன்ன Good News | Simbu Marriage Latest News | *TamilNadu

அவருக்கு தேவையான அனைத்து செயல்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் கவனித்துக் கொண்டனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் சென்னை திரும்பியுள்ளார்.

பன்முக திறமையாளர் டிஆர்

பன்முக திறமையாளர் டிஆர்

பிரபல இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமையை கொண்டவர் டி ராஜேந்தர். அரசியலிலும் கவனம் செலுத்திவரும் இவர், பல பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அமெரிக்காவில் சிகிச்சை

அமெரிக்காவில் சிகிச்சை

இதையடுத்து சென்னையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்ட டிஆர், தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவரது சிகிச்சைக்கான நடவடிக்கைகளை சிம்பு உள்ளிட்ட குடும்பத்தினர் உடனிருந்து கவனித்துக் கொண்டனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை சிறப்பாக முடிந்துள்ளது.

 சென்னை திரும்பினார் டிஆர்

சென்னை திரும்பினார் டிஆர்

இதையடுத்து அமெரிக்காவிலேயே சில தினங்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னை திரும்பியுள்ளார். அவரது மனைவி, மகன் குறளரசன், மகள் இலக்கியா மற்றும் மருமகன், பேரன் ஆகியோர் அவருடன் இருந்த நிலையில், தற்போது அவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

நாடு திரும்பிய டிஆருக்கு சென்னை விமானநிலையத்தில் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். இதையடுத்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் டி ராஜேந்தர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்காக, தன்னுடைய உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முதல்வருக்கு நன்றி

முதல்வருக்கு நன்றி

தொடர்ந்து தன்னுடைய நலனில் அக்கறை செலுத்திய முதல்வர் முக ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி உள்ளிட்டவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து அவரிடம் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மதங்களுக்கு அப்பாற்பட்டு தான் அனைத்து கடவுள்களிடமும் இதுகுறித்து பிரார்த்தனை செய்துக் கொள்வதாக அவர் கூறினார்.

 சிம்புவின் திருமணம் குறித்து டிஆர்

சிம்புவின் திருமணம் குறித்து டிஆர்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறிய டிஆர், கடவுள் மட்டுமே திருமணங்களை நிச்சயிக்க முடியும் என்றும் மனிதர்கள் அதை நிச்சயிக்க முடியாது என்றும் தெரிவித்தார். சிம்புவின் நல்ல மனதிற்கு நல்ல மனைவி அவருக்கு கிடைப்பார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மஹா படம் ரிலீஸ்

மஹா படம் ரிலீஸ்


இன்றைய தினம் சிம்பு கேமியோ ரோலில் நடித்துள்ள ஹன்சிகாவின் மஹா படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்தப் படத்திற்கு மிகச்சிறப்பான வரவேற்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X