GV Prakash: சூட்டிங்கை நிறைவு செய்த ஜிவி பிரகாஷின் 13 டீம்.. டப்பிங் ஸ்டார்ட்!
சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள '13' படத்தின் சூட்டிங் சமீபதில் நிறைவடைந்துள்ளது. தன்னுடைய இசையைப் போலவே தனது தேர்ந்தெடுத்த கதைகள் மூலமும் சிறந்த நடிகராகவும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.
அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அடுத்தடுத்த படங்களை கமிட் செய்துவரும் ஜிவி பிரகாஷ் தன்னுடைய இசையில் 100 படங்களை கடந்துள்ளார். இதேபோல தன்னுடைய நடிப்பில் 25 படங்களை கடந்துள்ளார். டார்லிங் படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜிவி பிரகாஷ்: நடிகர் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து இசையமைப்பாளர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து, அவருக்கு சிறப்பான வரவேற்பையும் பெற்று வருகின்றன. தன்னுடைய இசையில் 100 படங்களையும் நடிப்பில் 25 படங்களையும் கடந்துள்ளார் ஜிவி பிரகாஷ். டார்லிங் படம் இவரது என்ட்ரி படமாக தமிழில் அமைந்த நிலையில், தற்போது 25வது படமாக கிங்ஸ்டன் உருவாகி வருகிறது.
13 படம்: இந்நிலையில் அடுத்ததாக மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில் 13 படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இந்தப் படத்தில் அவருடன் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். கே. விவேக் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இன்றைய தினம் படத்தின் டப்பிங்கை பேசி ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்: படம் ராட்சசன், போர் தொழில் படங்களை போல இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் விவேக் தெரிவித்துள்ளார். தமிழில் அதிகமான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விவேக் நம்பிக்கை: ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்தது தன்னுடைய கனவு நினைவான தருணம் என்றும் விவேக் தெரிவித்துள்ளார்.. கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே, 13 படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அதன் கதைக்களம் புதிதாக இருப்பதாகவும் டார்லிங் படத்திற்குப் பிறகு தான் நடித்துள்ள ஹாரர் படம் இது, நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











