24 வருடங்களுக்கு பின்.. மீண்டும் ரஜினியுடன் ‘தர்பார்’ நடத்தப் போகும் பிரபல பாலிவுட் நடிகர்!
தர்பார் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் தாலிப் தஹில் நடிக்கிறார்.
சென்னை: ரஜினியின் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் தாலிப் தஹில் நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினி போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மும்பையில் கடத்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் தாலிப் தஹிலும் நடிப்பது தெரிய வந்துள்ளது. இதனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவரே உறுதி செய்துள்ளார்.
தாலிப் ஏற்கனவே ரஜினியுடன் கடந்த 1995 ஆம் ஆண்டு அமீர்கானின் அடாங்க் கி அடாங்க் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார்.
சுமார் 24 வருடங்களுக்குப் பின் மீண்டும் அவர் தர்பார் படம் மூலம் ரஜினியுடன் நடிக்க இருக்கிறார். ரஜினி, தாலிப் மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. படத்தில் ரஜினிக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தர்பார் பட செட்டில் ரஜினியைப் பார்த்த தாலிப் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். 'பல வருடங்களுக்கு பின் அவரை பார்த்தாலும், தற்போதும் அவர் 25 வயது இளைஞர் போல் தோற்றம் அளிக்கிறார்' என ரஜினி குறித்து கூறுகிறார் தாலிப்.


Click it and Unblock the Notifications











