Daniel Balaji: முன்னணி ஹீரோ முரளி.. அண்ணனிடம் சிபாரிசு கேட்காத டேனியல்.. என்ன காரணம்?

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சூழலில் அவர்குறித்த பல நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நடிகர் முரளி, டேனியல் பாலாஜியின் அண்ணன் என்பது தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. அண்ணன் என்றால் உடன் பிறந்த அண்ணன் இல்லை என்றும் முரளியின் அம்மாவும் டேனியல் பாலாஜியின் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதும் தற்போது வெளிப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி திரைப்படக் கல்லூரியில் பயின்ற காலகட்டத்திலேயே நடிகர் முரளி முன்னணி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்தார்.

அவரது அப்பா கன்னடத்தில் பிரபல இயக்குநர். அந்த வகையில் டேனியல் பாலாஜி நினைத்திருந்தால் எளிதாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கலாம். ஆனாலும் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே அவர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று ஒரு கட்டத்தில் அதிரடி வில்லனாக ரசிகர்களை கவர்ந்தார். தன்னுடைய அண்ணன் மிகப் பெரிய ஹீரோவாக இருந்த சூழலில் அவரை பார்க்க சென்றால் தான் அவரிடம் சிபாரிசு கேட்பதற்காக செல்வதாக மற்றவர்கள் கூறி விடுவார்கள் என்ற காரணத்திற்காகவே தன்னுடைய அண்ணன் முரளியை நேரில் சந்திப்பதை டேனியல் பாலாஜி தவித்தார் என்றும் தன்னுடைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Actor Daniel balaji not wished to ask recommendations from his brother actor late Murali

நடிகர் டேனியல் பாலாஜி: நடிகர் டேனியல் பாலாஜி காக்க காக்க. வேட்டையாடு விளையாடு. வடசென்னை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தனுஷுடன் மட்டுமே வட சென்னை மற்றும் பொல்லாதவன் படங்களில் இவர் நடித்துள்ளார். இதில் பொல்லாதவன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதேபோல கமல்ஹாசனுடன் டேனியல் பாலாஜி நடித்த வேட்டையாடு விளையாடு படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. இந்த படத்தில் சைக்கோத்தனமான வில்லனாக அவர் அதிரடி காட்டி இருந்தார்.

அதிரடி நடிப்பு: இந்த கேரக்டர் நெகட்டிவ் ரோலாக இருந்த போதிலும் இந்த கேரக்டர் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. அந்த அளவுக்கு தன்னுடைய மிரட்டலான நடிப்பை டேனியல் பாலாஜி இந்த கேரக்டர் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இந்த கேரக்டர் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவரை மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருந்தார் இயக்குனர். நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டேனியல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முரளியிடம் சிபாரிசு கேட்காத டேனியல்: நடிகர் முரளியின் தம்பி டேனியல் பாலாஜி. உடன்பிறந்த சகோதரர் இல்லை. டேனியல் பாலாஜியின் அம்மா மற்றும் மறைந்த முரளியின் அம்மா இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் என்ற வகையில் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய அண்ணன் மிகப்பெரிய ஹீரோவாக இருந்த போதிலும் அவரிடம் சிபாரிசு கேட்க டேனியல் பாலாஜி எப்போதும் நினைத்ததில்லை. தான் திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தன்னுடைய அண்ணன் மிகப்பெரிய ஹீரோவாக தமிழில் மாறியதாகவும் ஆனால் அவரிடம் சிபாரிசு கேட்க தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் டேனியல் பாலாஜி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முரளியை சந்திக்காத டேனியல்: அவரை நேரில் சந்தித்து பேசினால் தான் சிபாரிசு கேட்க தான் சென்றதாக மற்றவர்கள் நினைக்கக் கூடும் என்பதற்காக முரளியை நேரில் சந்திப்பதை தான் தவிர்த்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே ஒரு நாள் முரளி தன்னை கூப்பிட்டு பேசியதாகவும் அவர் முன்னணி ஹீரோவாக இருந்ததால் தன்னிடம் எப்படி பேசுவார் என்று தான் தயக்கத்துடன் சென்று பார்த்ததாகவும் டேனியல் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முரளி தன்னிடம் எப்போதும் போலவே இயல்பாக பேசியதாக அவர் தெரிவித்து இருந்தார். சிறுவயதில் இருவரும் இணைந்து விளையாடிய நிகழ்வுகள் குறித்து தங்கள் பேசிக் கொண்டதாகவும் தனது பேட்டியில் தெரிவித்தருந்தார்.

சொந்த உழைப்பில் முன்னேற்றம்: அப்போது முரளி தன்னிடம் வில்லனாகவே நடிக்க வேண்டுமா என்று கேட்டதாகவும் ஹீரோவாக நடிப்பதற்கு தான் நீங்கள் இருக்கிறீர்களே என்று தான் பதில் தெரிவித்ததாகவும் டேனியல் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். மேலும் முரளியின் நடிப்பை தான் கிண்டல் செய்ததாகவும் அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாகவும் டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். தன்னுடைய அண்ணன் மிகப்பெரிய ஹீரோவாக இருந்த போதிலும் தன்னுடைய சொந்த உழைப்பில் தான் முன்னேற வேண்டும் என்ற கொள்கையுடன் சித்தி சீரியலில் நடித்து, தொடர்ந்து சினிமாவில் சிறிய ரோல்களில் நடித்து, தொடர்ந்து அதிரடி வில்லனாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டேனியல் பாலாஜி, தற்போது நம்முடன் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X