டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று... மருத்துவமனையில் அனுமதி

சென்னை : தமிழ், மலையாள பட நடிகரான டேனியல் பாலாஜி, பெரும்பாலும் வில்லன் ரோல்களிலேயே நடித்துள்ளார். பாலாஜி என்ற சொந்த பெயர் கொண்ட இவர், முதல் முறையாக 2000 - 2001 ம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி டிவி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடிகராக அறிமுகமானார். அதில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

Actor Daniel Balaji tested covid 19 positive and hospitalized

இதையடுத்து டேனியல் என்ற பெயரை தனது பெயருடன் அடைமொழியாக இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து 2002 ம் ஆண்டு முதல் முறையாக ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் 2019 ல் விஜய் நடித்த பிகில் படத்தில் டேனியல் பாலாஜி, டேனியல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது கன்னட படங்களில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார்.

இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X