Daniel Balaji: மருதநாயகம் படத்திலேயே கமலுடன் இணைந்த டேனியல் பாலாஜி.. கேள்வி கேட்ட தருணம்!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 48 வயதேயான டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மரணம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தி என்ற சீரியல் மூலம் நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய டேனியல் பாலாஜி, தொடர்ந்து வில்லனாக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் இவரது நடிப்பில் சில படங்களே வெளியான நிலையில் அவை அனைத்தும் டேனியல் பாலாஜியின் புகழை தொடர்ந்து வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தன்னுடைய தனித்துவமான நடிப்பால் சித்தி சீரியலுக்கும் பலம் சேர்த்தவர் டேனியல் பாலாஜி. தொடர்ந்து சில சிறிய கேரக்டர் படங்களில் நடித்தவருக்கு காக்க காக்க படம் மிகச்சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்திலேயே வேட்டையாடு விளையாடு படத்தில் புகுந்து விளையாடியிருப்பார் டேனியல் பாலாஜி. அவரது நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் இந்தப்படம் மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்திலும் வடசென்னை, பொல்லாதவன் படங்களில் நடித்து, தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கொண்டாட செய்தார் டேனியல் பாலாஜி.

Actor Daniel balaji s throwback interview about his joining with Kamal haasan in Maruthanayagam movie

நடிகர் டேனியல் பாலாஜி: நடிகர் டேனியல் பாலாஜி சின்னத்திரையில் ராதிகா சரத்குமாருடன் இணைந்து சித்தி சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை மட்டுமில்லாமல் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. முன்னதாக தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியிலும் படித்து சினிமாவிற்காக தன்னை மெருகேற்றிக் கொண்ட டேனியல் பாலாஜி, தன்னுடைய அண்ணன் முரளியின் காமராசு படத்தில் நாஞ்சில் பிசி அன்பழகனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் தமிழ் தெரியாத லைலாவிற்கு இந்தி மூலம் படத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த மிகப்பெரிய உதவியாக இருந்ததாக அன்பழகன் தற்போது தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

மிரட்டல் வில்லன்: காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பொல்லாதவன் என அடுத்தடுத்த படங்களில் தனக்கு கிடைத்த கேரக்டர்களை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் டேனியல் பாலாஜி. வில்லன் நடிப்பில் இவரது தனித்துவமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் கட்டுண்டனர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார், மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்ந்தெடுத்தப் படங்களில் மட்டுமே நடித்து தன்னை சுருக்கிக் கொண்டார் டேனியல் பாலாஜி. வேட்டையாடு படத்தில் இவரது அமுதன் கேரக்டர் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக எப்போதும் உள்ளது.

மருதநாயகம் படத்தில் டேனியல் பாலாஜி: கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய டஃப்பை இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டர் மூலம் கொடுத்திருந்தார் டேனியல் பாலாஜி. இதனிடையே இந்தப் படத்திற்கு முன்னதாகவே கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தில் தான் இணைந்து செயலாற்றியதாக டேனியல் பாலாஜி தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். படத்தில் அவருடன் இரண்டாவது உதவி இயக்குநராக பணியாற்ற தான் சென்ற நிலையில், தன்னுடைய தகுதியை பார்த்து அவர், தன்னை கூடவே வைத்துக் கொண்டதாக டேனியல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அந்தப் படத்திற்காக எந்தமாதிரியாக உழைத்தார் என்பதை தான் கூடவே இருந்து பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Actor Daniel balaji s throwback interview about his joining with Kamal haasan in Maruthanayagam movie

கமல்ஹாசன் குறித்து பாராட்டு: கமல்ஹாசன் மிகவும் நுணுக்கமாக ஈட்டி, வேல், கத்தி போன்றவற்றை கையாளுவது, காஸ்ட்யூம்கள், ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்திலும் செயல்பட்டதாகவும் டேனியல் தனது பேட்டியில் பாராட்டியுள்ளார். ஸ்கிரிப்டை படித்து பார்க்குமாறு அவர் தன்னிடம் கொடுத்ததாகவும் இதையடுத்து தானும் டிஸ்கஸ் செய்ய வேண்டுமே என்பதற்காக ஒரு காட்சி குறித்து தான் கேள்வி எழுப்பியதாகவும் ஆனால் அந்த இடத்தில் அந்தக் காட்சி வைக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் தனக்கு தெளிவுப்படுத்தியதாகவும் டேனியல் பாலாஜி மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். மருதநாயகம் படம் கமல்ஹாசனின் கனவு ப்ராஜெக்ட் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்தப் படத்திலேயே டேனியல் பாலாஜி அவருடன் இணைந்து பணியாற்றியது யாருக்கும் தெரியாதவிஷயம்தான். தற்போது அவரது மரணத்தை தொடர்ந்து அது வெளிப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X