டீன்ஏஜ் பெண்களிடம் போட்டோ கேட்ட விவகாரம்.. வக்கீல் மூலம் வார்னிங் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: டீன் ஏஜ் பெண்களிடம் போட்டோ கேட்டதாகவும், ஆபாசமாக பேசியதாகவும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் டேனியல் வக்கீல் மூலம் வார்னிங் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் டேனியல் போப். இவர் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானர்.
அந்தப் படத்தில் இடம் பெற்ற, பிரண்ட் லவ் மேட்டரு, ஃபீல் ஆயிட்டாரு என்ற நகைச்சுவை காட்சி பெரும் ஹிட்டானது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

போட்டோ கேட்டு தொல்லை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக டேனியலின் பெயர் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 வயது பள்ளி மாணவியுடன் சாட் செய்ததாகவும், அப்போது அந்த பெண்ணிடம் அவரது போட்டோவை கேட்டு தொல்லை செய்ததாகவும் டேனியல் மீது புகார் எழுந்தது.

கடும் விமர்சனம்
மேலும் அவர் இளம் பெண்களுடன் சாட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் போட்டோக்களையும் ஜேசன் சாமுவேல் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் டேனியலை கடுமையாக விமர்சித்தனர்.

வழக்கறிஞர் மூலம் பதில்
பாடகி சின்மயும் டேனியல் மீதான புகார் குறித்து டிவிட்டியிருந்தார். இந்த புகார்கள் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்தார் நடிகர் டேனியல். இந்நிலையில் தன் மீதான புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்துள்ளார்.

எதிராக வதந்திகள்
இதுதொடர்பாக டேனியலின் வழக்கறிஞர் ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த நான்கு நாட்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் எனது வாடிக்கையாளரைப் பற்றி போலியான, ஆதாரமற்ற மற்றும் அவருக்கு எதிராக தெளிவற்ற குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.

விளைவுகளை சந்திக்க வேண்டும்
அவதூறான சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அனைவரும் சமூகத்தில் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறீர்கள் என்று எனது வாடிக்கையாளர் குறிப்பிடுகிறார். எனவே எனது வாடிக்கையாளருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகள், மீம்ஸ்கள், வீடியோக்கள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video

எச்சரிக்கை
இந்த அறிக்கையின் மூலம் நடிகர் டேனியல் போப், தனக்கு எதிராக ஒரு குழு செயல்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்படி நடவடிக்கை பாயும் என அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். நடிகர் டேனியல் தற்போது வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











