Delhi Ganesh: 10 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் வேலை.. டெல்லி கணேஷ்ஷின் இன்னொரு முகம் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் என்பதைவிடவும், தென்னிந்திய சினிமாவின் முத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் டெல்லி கணேஷ். இவர் தனது 81வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று அதாவது நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் தூக்கத்திலேயே காலமானார். இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவுக்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நாடகங்களில் நடித்து அதன் பின்னர் சினிமாவுக்கு வந்தவர். அதேபோல் இந்திய விமானப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அது தொடர்பாகவும் இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் வீட்டியிலேயே உயிரிழந்ததையடுத்து, பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தமிழில் அதிகம் நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் என இவர் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு புது அடையாளத்தை உருவாக்கியவர் எனலாம்.

delhi ganesh indian air force

டெல்லி கணேஷ் தூத்துகுடி மாவட்டம் வல்லநாட்டில் கடந்த 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் நாடகங்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்த டெல்லி கணேஷ், அதிகப்படியான நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். அதன் பின்னரே சினிமாவில் நடிக்க வந்தார். இவரை பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே கூறியதைப் போல் இவர் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தது.

delhi ganesh indian air force

நாடக சபா: டெல்லி கணேஷின் இயற்பெயர் கணேஷ் மட்டும்தான். இவரது பெயருடன் டெல்லி இணைய முக்கிய காரணம், இவர் டெல்லியில் மிகவும் 1960 கால கட்டங்களில் இருந்து மிகவும் புகழ் பெற்ற நாடக சபாவாக இருந்த தக்‌ஷனா பாரத் நாடக சாபாவில் இணைந்து நடிக்கக் கற்றுக் கொண்டார். மேலும் அந்த நாடக சபாவில் அரங்கேற்றம் செய்யப்பட்ட பல்வேறு நாடகங்களில் நடிக்கவும் செய்தார்.

delhi ganesh indian air force

விமானப்படை: டெல்லியில் 1964 முதல் 1974ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். இந்திய விமானப்படையில் இவர் பணியில் சேரும்போது இவரது வயது 20. மேலும் தனது 30வது வயதில் இந்திய விமானப்படை வேலையை விட்டுவிட்டு, நாடகங்களில் நடிப்பதிலும், சினிமாவில் நடிக்க முயற்சி செய்வதிலும், கவனம் செலுத்தி வந்தார். 10 ஆண்டுகள் இவர் டெல்லியில் விமானப்படையில் பணியாற்றியபோது நாடக சாபாவில் பயிற்சியும் எடுத்து வந்துள்ளார்.

delhi ganesh indian air force

அறிமுகம்: நாடகத்தில் கைதேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியதால், இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தரின் கவனத்தினை எளிதில் ஈர்த்துவிட்டார். அவரது இயக்கத்தில், 1977ஆம் ஆண்டு வெளியான பட்டினிப் பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமான டெல்லி கணேஷ் திரை வாழ்க்கை வேகமாக உயர்ந்தது. குறிப்பாக சினிமா உலகில் கே. பாலச்சந்தர் ஒருவரை அறிமுகம் செய்கின்றார் என்றால் அவருக்கு தனி மதிப்பு கிடைக்கும் எனலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X