Delhi Ganesh: நடிகர் டெல்லி கணேஷ் மறைவு..வீட்டிலேயே உயிர் பிரிந்த சோகம்!

சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகர்களில் ஒருவராக அறியப்பட்டவர். இவர் நேற்று அதாவது நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 81. கடந்த சில தினங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டெல்லி கணேஷ் நேற்று, நள்ளிரவு ராமாபுரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அவரது மறைவு தமிழ் சினிமா உலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரம் நேற்று இரவில் இருந்தே, அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

delhi ganesh delhi ganesh death

தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ் நாடகத்தில் இருந்து அதன் பின்னர் சினிமாவுக்கு வந்தவர். நகைச்சுவைக் கதாபாத்திரம், அதையொட்டிய குணச்சித்திர கதாபாத்திரம் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருங்கியவரான டெல்லி கணேஷ், கமல்ஹாசனின் மிகவும் முக்கியமான படங்களில் இடம் பெற்றுவிடுவார். இவர் தக்‌ஷினா பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடக சபாவில் உறுப்பினராக இருந்ததால் இவருக்கு டெல்லி கணேஷ் என பெயர் ஏற்பட்டுள்ளது.

நடிகர் டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகர்களில் ஒருவராக அறியப்பட்டவர். இவர் நேற்று அதாவது நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 81. கடந்த சில தினங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டெல்லி கணேஷ் நேற்று, நள்ளிரவு ராமாபுரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அவரது மறைவு தமிழ் சினிமா உலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரம் நேற்று இரவில் இருந்தே, அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

delhi ganesh delhi ganesh death

தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ் நாடகத்தில் இருந்து அதன் பின்னர் சினிமாவுக்கு வந்தவர். நகைச்சுவைக் கதாபாத்திரம், அதையொட்டிய குணச்சித்திர கதாபாத்திரம் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருங்கியவரான டெல்லி கணேஷ், கமல்ஹாசனின் மிகவும் முக்கியமான படங்களில் இடம் பெற்றுவிடுவார். இவர் தக்‌ஷினா பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடக சபாவில் உறுப்பினராக இருந்ததால் இவருக்கு டெல்லி கணேஷ் என பெயர் ஏற்பட்டுள்ளது.

மறைவு: நடிகர் டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் வீட்டியிலேயே உயிரிழந்ததையடுத்து, பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தமிழில் அதிகம் நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் என இவர் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு புது அடையாளத்தை உருவாக்கியவர் எனலாம்.

சொந்த ஊர்: டெல்லி கணேஷ் தூத்துகுடி மாவட்டம் வல்லநாட்டில் கடந்த 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் நாடகங்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்த டெல்லி கணேஷ், அதிகப்படியான நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். அதன் பின்னரே சினிமாவில் நடிக்க வந்தார். இவரை பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே கூறியதைப் போல் இவர் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தது.

கே. பாலசந்தர்: நாடகத்தில் கைதேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியதால், இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தரின் கவனத்தினை எளிதில் ஈர்த்துவிட்டார். அவரது இயக்கத்தில், 1977ஆம் ஆண்டு வெளியான பட்டினிப் பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமான டெல்லி கணேஷ் திரை வாழ்க்கை வேகமாக உயர்ந்தது. குறிப்பாக சினிமா உலகில் கே. பாலச்சந்தர் ஒருவரை அறிமுகம் செய்கின்றார் என்றால் அவருக்கு தனி மதிப்பு கிடைக்கும். தனது அறிமுகப்படத்திலேயே பலரது கவனத்தினை ஈர்த்தவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X