Delhi Ganesh: நிறைவேறாத ஆசையோடு மரணம்.. டெல்லி கணேஷ்ஷின் உடலுக்கு இறுதி மரியாதை எப்போது தெரியுமா?

சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் நேற்று அதாவது நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு உடல்நலக் குறைவால், சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததும் பல்வேறு நடிகர்கள் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்ஷின் உடலுக்கு இறுதி அஞ்சலி எப்போது செய்யப்படும் என்றத் தகவலை அவரது மகன் மகாதேவன் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

டெல்லி கணேஷ்ஷின் மகன் மகாதேவன் பேசுகையில், " அப்பாவுக்கு இப்போதுதான் 80 வயது ஆகின்றது. அவருக்கு அண்மையில்தான் நாங்கள் சதய விழா நடத்தினோம். நன்றாகத்தான் இருந்தார். இடையில் கொஞ்சம் வயது மூப்பின் காரணமாக சில அறிகுறிகள் அவரது உடல்நிலையில் மாற்றங்கள் காணப்பட்டது. அதற்காக நாங்களும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம்.

delhi ganesh delhi ganesh death

மறைவு: நேற்று இரவு அவருக்கு மாத்திரை கொடுக்கலாம் என்ற நிலையில், அவரிடம் போனோம். அப்பாவை எழுப்ப முயற்சித்தோம், ஆனால் அவர் அசைவில்லாமல் இருந்தார். உடனே மருத்துவரை வரச்சொல்லி, பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதுதான் நடந்தது. இன்னும் எங்களின் உறவுக்காரர்கள் வரவேண்டி உள்ளது. அதேபோல் எனது மூத்த அக்காவின் வீட்டுக்காரர் வரவேண்டி உள்ளது. எனவே, அவர்கள் வரும் வரை நாங்கள் காத்திருப்போம். மேலும் நடிகர் சங்கத்தினரும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.

கமல், நாசர்: நாளை அதாவது நவம்பர் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் அவருக்கு இறுதி மரியாதை செய்யவுள்ளோம். நாங்கள் இன்னும் யாருக்கும் முறையாகச் சொல்லவில்லை. ஒருவரிடம் கூறினோம், அதன் மூலமாக அனைவருக்கும் தெரியவரும் என இருக்கின்றோம். கமல்சாருக்கு நாங்கள் இன்னும் கூறவில்லை. அவரும் எங்களுக்கு போன் செய்யவில்லை. நாசர் சார் போன் செய்து பேசினார். அவர் வெளியூரில் இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கு தொடர்ந்து போன் கால்கள் வந்தவண்ணம் உள்ளது.

delhi ganesh delhi ganesh death

அறிகுறிகள்: அப்பாவின் மரணம் திடீரென நடந்துவிட்டது. எங்களுக்கு அவர் மரணிக்கப்போகின்றார் என்பது போன்ற அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால் நாங்கள் கூடுதல் கவனமாக இருந்திருப்போம். நன்றாக இருந்தார், கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது அப்படித்தான் இருந்தார். நேற்று அக்கா, தற்செயலாக வீட்டுக்கு வந்திருந்தார். அக்காவோடு நன்றாக பேசிக்கொண்டு இருந்தார். திடீரென இப்படி ஆகிவிட்டது. சென்னையில்தான் அவருக்கு இறுதி மரியாதை செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என பெரும் கவலையோடு பேசினார். டெல்லி கணேஷ் மறைவுச் செய்தி கேட்டு, மூத்த நடிகர்கள் சிவக்குமார், பி.வாசு உள்ளிட்ட பலரும் டெல்லி கணேஷ் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

delhi ganesh delhi ganesh death

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X