Delhi ganesh: டெல்லி கணேஷுக்கு இப்படி ஒரு ஆசையா?.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே!
சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பல ஆண்டுகளாக நடித்து வந்தவர். 1976ம் ஆண்டில் சினிமாவில் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சிந்து பைரவி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி என இவரது கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்திய படங்கள் பல. சமீபத்தில் இவரது நடிப்பில் ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் தன்னுடைய 81வது வயதில் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

நடிகர் டெல்லி கணேஷ்: நடிகர் டெல்லி கணேஷ் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் மிக அதிகமாக நடித்துள்ளார். கடந்த 1976ம் ஆண்டில் சினிமாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து வந்தது. தன்னுடைய முதல் படத்திலேயே கே பாலசந்தர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு டெல்லி கணேஷிற்கு கிடைத்தது. முதல் படம் பட்டின பிரவேசம். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவரது அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து சிந்து பைரவி, அவ்வை சண்முகி, நாயகன், மைக்கேல் மதன காம ராஜன், தெனாலி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: பல விருதுகளுக்கு சொந்தக்காரரான டெல்லி கணேஷிற்கு கடந்த 1994ம் ஆண்டில் கலைமாமணி விருது கிடைத்தது. படங்களில் மட்டுமில்லாமல் குறும்படங்கள், டிவி தொடர்கள், வெப் தொடர்கள் போன்றவற்றிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே தன்னுடைய 81வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி கணேஷ் உயிரிழந்துள்ளார். கடந்த 3 நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கணேஷ், நேற்றிரவு 11.30 மணியளவில் அவரது ராமாபுரம் வீட்டில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கணேஷின் விருப்பம்: மிகச்சிறப்பான நடிகராக பார்க்கப்பட்டவர் டெல்லி கணேஷ். அவருக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது. தன்னுடைய மகன் மகாதேவன் கணேஷை மிகப்பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவர் முதல் முறையாக ஷாம், ஆர்யா, அசின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த உள்ளம் கேட்குமே படத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார். தொடர்ந்து திருடி, உற்சாகம் படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்துவந்த தன்னுடைய மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் டெல்லி கணேஷ் தொடர்ந்து ஈடுபட்டார்.
ஹீரோவான மகா கணேஷ்: கடந்த 2016ம் ஆண்டில் வெளியான என்னுள் ஆயிரம் படத்தில் மகா கணேஷ் ஹீரோவானார். இந்தப் படத்தில் அவருடன் ஸ்ருதி, மெரினா மைக்கேல், வின்செண்ட் அசோகன் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. தன்னுடைய மகனுக்காக தன்னுடைய நாடக நிறுவனத்தையும் ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமாக டெல்லி கணேஷ் மாற்றியிருந்தார். ஆயினும் அவரது மகன் ஹீரோவாக ரசிகர்களை கவரவில்லை. கடைசியாக விக்ரம் 2 படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகா நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











