சபரிமலைக்கு சென்றபோது 'வாணி ராணி' சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்
சென்னை: வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த கோவை தேசிங்கு ராஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ராதிகா சரத்குமாரின் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் கோவை தேசிங்கு ராஜா(43). சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும் நடித்துள்ளார்.
அவர் கோவையில் உள்ள பல்லடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கோவில்
கோவை தேசிங்கு ராஜா தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பிச் சென்றார். கோவிலுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் ஏறியபோது அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.

மரணம்
மலைப்பகுதியில் வலியால் துடித்த தேசிங்கு ராஜா அங்கேயே மரணம் அடைந்தார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

அடக்கம்
தேசிங்கு ராஜாவின் உடல் கோவை கொண்டு வரப்பட்டு பல்லடத்தில் உள்ள மயானம் ஒன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோவிலுக்கு சென்றவர் பிணமாக திரும்பி வந்ததை பார்த்து அவரது குடும்பத்தார் கதறி அழுதனர்.

இரங்கல்
தேசிங்கு ராஜாவின் மறைவு செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











