Viduthalai 2: ரொம்ப கொடூரமானவர்.. வீட்டுலயே சேர்த்துக்கமாட்டேன்.. கணவர் குறித்து தேவதர்ஷினி ஓபன்!
சென்னை: விடுதலை பாகம் 2 ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது. படம் பார்த்த ரசிகர்கள், படம் குறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். பெரும்பாலான ரசிகர்கள் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தப் படம், திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் படத்தில் நடித்த சேத்தன் மற்றும் அவரது கதாபாத்திரம் குறித்து அவரது மனைவி தேவதர்ஷினி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
விடுதலை பாகம் 1 படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக பல காரணங்கள் இருந்தாலும், அதில் இடம் பெற்ற, நடிகர் சேத்தனின் கதாபாத்திரம் மிகவுமே, முக்கியமானது. காரணம் அவரது வில்லதனமான நடிப்பு படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, அவர் மீது பெரும் கோபத்தினை உண்டாக்கி படத்துடன் ஒன்றச் செய்தது. சூரியை திட்டுகின்ற, தண்டிக்கின்ற, சூரியை கொலை செய்ய நினைக்கின்ற, காட்சிகளில் எல்லாம் சேத்தன் நடித்தார் என்பதைவிடவும், அந்தக் கதாபாத்திரமாக வாழ்ந்தார் என்றுதான் கூறவேண்டும். இதுமட்டும் இல்லாமல், கிராம மக்களை அழைத்துவந்து, நிர்வாணமாக்கி துன்புறுத்தும் காட்சிகளும் ஆக்ரோசத்தில் வார்த்தைகளை வீசுவதிலும் அந்தக் கதாபாத்திரத்தின்மீது, ரசிகர்களுக்கே உச்சகட்ட கோபம் வரும் அளவுக்கு, நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படியான நிலையில், விடுதலை பாகம் 2 படத்தினை சேத்தன் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான தேவதர்ஷினி மற்றும் அவர்களது மகள் என மூவரும் இணைந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார்கள். படம் முடிந்த பின்னர் ரசிகர்கள் சேத்தனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையெல்லாம் பார்த்த தேவதர்ஷினி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
தேவதர்ஷினி: அதாவது, " படம் நன்றாக உள்ளது. அவரை நிற்கவைத்து பொன்னாடையெல்லாம் போர்த்தியுள்ளீர்களே, உங்களுக்கே நியாயமா தெரியுதா? அதிகமான வில்லன் கதாபாத்திரங்களைப் பார்த்திருக்கின்றேன், ஆனால் இதில் எனக்கே ஒத்துக்க முடியாத அளவுக்கு மோசமானவராக உள்ளார். ரொம்பவும் கொடூரமானவராக உள்ளார். நானும் எனது மகளும் தள்ளிதான் அமர்ந்திருந்தோம். படம் பிரமாண்டமாக உள்ளது. படம் குறித்து பேசமுடியாத அளவுக்கு சிறப்பான எண்டில் நிறுத்தியுள்ளார்கள்.

கதவு திறக்க மாட்டேன்: படம் நல்லா இருக்கு, படத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எதாவது ஒன்றை கணெக்ட் செய்து கொள்வார்கள். சேத்தன் வீட்டுக்கு வந்தால், கதவையே திறக்க மாட்டேன். அவரை யாராவது கூட்டிச் செல்லுங்கள். ராஜா சார் தெய்வம், அவர் குறித்து நான் என்ன சொல்வது" என பேசினார். அதேபோல் சேத்தன் படம் முடிந்த பின்னர் பேசுகையில். " எல்லா பெருமையும் வெற்றி மாறனுக்குத்தான். அவர் அந்தக் கதாபாத்திரத்தை எழுதியதுதான் பாராட்டுகளைப் பெறவைத்துள்ளது.
திருப்தி: முதல் பாகத்தைவிட, இதில் ஒருபடி மேலேதான். ரொம்பவும் திருப்தியாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் படத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அந்த அனுபவம் எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது" என பேசியுள்ளார். தனது கணவர் குறித்து தேவதர்ஷினி, நகைச்சுவையாக பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











