துபாயில் மிமிக்ரியால் அரங்கை அதிர வைத்த நடிகர் தாமு

By Siva

துபாய்: துபாயில் நடந்த தொழிலாளர் நல விழாவில் நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு அனைவரையும் தனது மிமிக்ரியால் அசத்தினார்.

துபாய் ஈடிஏ எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் 20.03.2014 அன்று மாலை நடைபெற்ற தொழிலாளர் நல விழாவில் நடிகர் தாமு பங்கேற்று தொழிலாளர்களை மகிழ்வித்தார்.

நிகழ்ச்சிக்கு ஈடிஏ எம்.பி.எம். முதுநிலை பொது மேலாளர் ஹமீது தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தீய பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தாமு

தாமு

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து வந்திருந்த நடிகர் தாமுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மிமிக்ரி

மிமிக்ரி

நடிகர் தாமு தனது மிமிக்ரியின் மூலமாக உடலாலும், உள்ளத்தாலும் சோர்ந்திருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

ஆரவாரம்

ஆரவாரம்

நள்ளிரவைத் தாண்டியும் நிகழ்ச்சியை முடிக்க இயலாமல் தொழிலாளர்களின் ஆரவாரத்தில் நடிகர் தாமு திணறினார்.

புகைப்படம்

புகைப்படம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தாமுவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நலத்துரை அலுவலர்கள் பீர் முஹம்மது, பாலரசு, முகாம் அலுவலர்கள் பாஷா, சௌந்தர்ராஜ், அமானுல்லா, ரைசுதீன், அஹமது சுலைமான் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.

திடீர் ஏற்பாடு

திடீர் ஏற்பாடு

திடீரென ஏற்பாடு செய்திருந்தாலும் வார விடுமுறையினை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நடிகர் தாமுவிற்கும், முகாம் நிர்வாகத்தினருக்கும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X