அஜித்தின் பில்லா படம்.. விஜய் செஞ்சது என்ன தெரியுமா?.. வெறித்தனமா இருந்திருக்காரே

சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார். எனவே இனி வரும் காலங்களில் அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்தச் சூழலில் விஜய் பற்றி ஒரு விஷயம் தெரிய வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

Throwback stories Ajith Vijay

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் பாதியில் படத்திலிருந்து வெளியேறினார்.

அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.

இப்போதைய படங்கள்: அஜித் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் செய்துவருகிறார். அதேபோல் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும்; அதுதான் அவரது கடைசி படம் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் இருவரும் இனி இணைந்து நடிப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

பில்லா தீம்: இந்நிலையில் விஜய் பற்றி புதிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது விஜய்க்கு மிகப்பிடித்த ஹீரோ என்றால் அது அஜித்தானாம். ரஜினிக்கூட இல்லையாம். அஜித் நடித்த பில்லா பட ரிலீஸின்போது அந்தப் படத்தின் தீம் மியூசிக்கைதான் தனது மொபைல் ஃபோன் ரிங்டோனாக வைத்திருந்தாராம். இதனை நடிகர் தாமு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X