ராயன் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்.. குழப்பத்தில் படக்குழு!

சென்னை: நடிகர் தனுஷ் எழுதி இயக்கி உள்ள ராயன் படம் ஜூலை 26ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் கதை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளதால், படக்குழு மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவரான தனுஷ், துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப்படத்தில் நடித்த தனுஷ், பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

dhanush Raayan AR rahman

தனுஷின் ராயன்: இந்த படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் அடுத்ததாக ராயன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். அவரின் 50-வது படம் அவரின் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாகும் இருக்கிறது. இப்படத்தில் தனுஷூடன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிட்டான பாடல்: ராயன் படத்திலிருந்து வெளியான அடங்காத அசுரன் பாடலும் வாட்டர் பாக்கெட் பாடலும் ராயன் ரம்பல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. கானா பாடல் வடிவில் இந்த பாடல் அமைந்ததால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்தது. இசை வெளியீட்டு விழாவின் போது அடங்காத அசுரன் பாடலை தனுஷ் மற்றும் ரகுமான் பாடினார்கள்.

ராயன் படத்தின் கதை: சற்று நேரத்தில் ராயன் படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில், ராயன் படத்தின் கதை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தனுஷ் வில்லன் ஏரியாவில் தனது சகோதரர்கள், சகோதரிகளை வைத்து ஒரு ஓட்டலை அமைதியாக நடத்திக்கொண்டு வருகிறார். இப்படி அமைதி வாழ்க்கை போய் கொண்டு இருக்கும் போது தான், தனுஷ் ஓட்டலை மட்டும் நடத்தவில்லை, யாருக்கும் தெரியாமல் வில்லன்கள் குறித்த தகவலை போலீசுக்கு தெரிவிக்கும் போலீஸ் இன்பார்மராக இருக்கிறார்.

மிரட்டலான கதை : இந்த விஷயத்தில் வில்லனுக்கு தெரியவர, அவரை குடும்பத்தோடு தீர்த்துக்கட்ட வில்லன் திட்டம் போட,தனுஷ் தனது சகோதர்களை வைத்து எப்படி வில்லனை எதிர்த்தார் என்பதுதான் ராயன் படத்தின் அட்டகாசமான கதையாம். போலீஸ், ரவுடி என இரண்டுமே இல்லாமல் ஒரு மிரட்டலான கேரக்டரில் தனுஷ் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. லீக்கான படத்தின் கதையால் படக்குழு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X