மகனுக்காக இணைந்த தனுஷ் -ஐஸ்வர்யா.. ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற யாத்ரா!

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது பிரிவு அறிவிப்பை வெளியிட்டனர்.

Recommended Video

Grayman 2வில் Dhanushக்கு முக்கிய Character? | Russo Brothers சொன்னது என்ன?

இதையடுத்து ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியும் நடைபெற்றது.

ஆனால் இருவரும் இதில் பிடி கொடுக்காமல் தங்களது கேரியரில் தங்களை பிசியாக்கிக் கொண்டனர்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த நான்கு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 4 நாட்களில் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

சிறப்பான திருச்சிற்றம்பலம்

சிறப்பான திருச்சிற்றம்பலம்

கடந்த 4 நாட்களில் திருச்சிற்றம்பலம் படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தொடர்ந்து இந்தப் படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பு மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. இருவரும் போட்டிப் போட்டு நடித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தனுஷின் வாத்தி, நானே வருவேன் போன்ற படங்கள் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் நடிக்கவுள்ளார். தன்னுடைய கேரியரில் மிகச்சிறப்பாக நடைபோட்டு வருகிறார் தனுஷ். இவையெல்லாம் அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகின்றன.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

ஆனால் சொந்த வாழ்க்கையில் 18 ஆண்டுகளை கழித்த நிலையில் தற்போது விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் தனுஷ். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினியுடன் விவாகரத்து முடிவை அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது.

சேர்த்து வைக்கும் முயற்சிகள்

சேர்த்து வைக்கும் முயற்சிகள்

இதையடுத்து அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால் இதில் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் தோல்வியையே சந்தித்தனர். தொடர்ந்து இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். பாலிவுட்டில் படமியக்கும் அறிவிப்பை ஐஸ்வர்யா மேற்கொண்டார். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

தனுஷின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ரிலீசாகி வருகின்றன. இந்நிலையில் இவர்களின் மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ரசிகர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டு வந்தது. தற்போது இதையொட்டி இருவரும் இணைந்துள்ளனர்.

மகனுக்காக இணைந்த தனுஷ் -ஐஸ்வர்யா

மகனுக்காக இணைந்த தனுஷ் -ஐஸ்வர்யா

வாழ்க்கையில் இணைவார்களா என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தங்களது மகன் யாத்ராவின் பள்ளி விழாவிற்காக இருவரும் இணைந்துள்ளனர். யாத்ரா தனது பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக இன்றைய தினம் பொறுப்பேற்ற நிலையில், வேறு வழியில்லாமல் இந்த விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில்தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் இணைந்து பார்க்க முடிந்தது.

ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் போஸ்ட்

ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் போஸ்ட்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ரஜினி, தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதிவியேற்கவுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் யாத்ராவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்ததையும் பார்க்க முடிந்தது.

இணைந்து புகைப்படம்

இணைந்து புகைப்படம்

இதனிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாத்ரா மற்றும் லிங்கா மற்றும் சிலரும் இந்தப் புகைப்படத்தில் காணப்படுகின்றனர். மகனின் பள்ளி நிகழ்ச்சியில் வேறு வழியில்லாமல் பங்கேற்றாலும் ஒன்றாக இருவரும் புகைப்படம் எடுத்துள்ளது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

வைரலான புகைப்படம்

வைரலான புகைப்படம்

தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் அருகருகில் இல்லையென்றாலும் ஒரே புகைப்படத்தில் காணப்படுகின்றனர். இதையடுத்து இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. தங்களின் பிரிவு முடிவில் இருவரும் உறுதியாக இருப்பதாகவே காணப்பட்டாலும், விரைவில் இணையவுள்ளதாக அவ்வப்போது இணையதளத்தில் தகவல்கள் வெளியாவதையும் புறந்தள்ள முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X