பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆச்சு.. நல்ல முடிவு எடுத்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி..இதுவும் வதந்தியா?

சென்னை : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இருவரும் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது.

Actor Dhanush and Aishwarya Rajinikanth have decided to live together

தனுஷ்-ஐஸ்வர்யா : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரின் பிரிவு முடிவு குறித்து இதுவரை ரஜினிகாந்த் மௌனமாகவே இருந்து வருகிறார். ஆனால் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, இவர்கள் பிரிவு நிரந்தரமானது அல்ல இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

இருவரும் பிஸி : தனுஷூடனான பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா தனது கவனத்தை மாற்ற முயற்சி செய்து பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு,இந்தியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷூம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Actor Dhanush and Aishwarya Rajinikanth have decided to live together

வெறும் வதந்தி : ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிய போவதாகவும், இருவரும் கோர்ட்டில் விவாகரத்திற்கு விண்ணப்பித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது இதனால், ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் அது வெறும் வதந்தி என தெரியவந்ததால், தனுஷின் ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரஜினியின் ஆசைப்படி: மேலும், ரஜினி தன்னுடைய பேரன்களான யாத்ரா, லிங்கா மீது அதிக பாசத்தை வைத்து இருக்கிறார். எப்போதும் அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகத்தான் தனது மருமகன் தனுஷிடம் போயஸ் கார்டனில் வீடு கட்ட வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், வீடு கட்டி முடிப்பதற்குள் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நல்ல செய்தி : மேலும், இருவரும் பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட போதும் இதுவரை நீதிமன்றம் செல்லாததால் இவர்கள் நிச்சயம் சேர்ந்து விடுவார்கள் என்றும், தற்போது தனுஷ், ரஜினியின் ஆசைப்படி புது வீடு கட்டி போயஸ் கார்டனில் குடியேறி உள்ளதால், இருவரும் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற வதந்திகளைப் போல இதுவும் இருக்கக்கூடாது என அவரது ரசிகர்கள் கடவுளை வேண்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X