தனுஷ் ஐஸ்வர்யா காதல் கதை.. 18 வருடத்தில் கசந்த வாழ்க்கை.. பிள்ளைகளை மறந்துட்டீங்களே?

சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான தனுஷ் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள், நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அவர்களின் முதல் சந்திப்பு மற்றும் காதல் கதை குறித்து இப்போது பார்க்கலாம்.

கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ், அண்ணன் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் படமே இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. அதைத்தொடர்ந்து, காதல் கொண்டேன் திரைப்படத்தில், அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ஆடியன்சை ஆச்சரியப்பட வைத்தார். இதைத் தொடர்ந்து திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்த சரவணன், தேவதையை கண்டேன் என அடுத்தடுத்த படத்தில் நடிப்பு, டான்ஸ், பாட்டு என சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே டாப் கியரில் சென்றார்.

Actor Dhanush and aishwarya rajinikanth love story

இந்த நேரத்தில் தான் காதல் கொண்டேன் திரைப்படம் சென்னை எக்மோரில் இருக்கும் ஆல்பர்ட் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அந்த படத்தை பார்த்த ஐஸ்வர்யா, தனுஷுக்கு பூங்கொத்தை அனுப்பி வாழ்த்து தெரிவித்தார். தனுஷின் சகோதரியும், ஐஸ்வர்யாவும் தோழி என்பதால் தனுஷும் பதிலுக்கு அவரை வீட்டுக்கு அழைத்து தனது நன்றியை கூறியுள்ளார். அப்போது தான் இருவருக்கும் ஒரு அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஐஸ்வர்யா குறித்து பல கிசுகிசுக்கள் வெளி வந்துக்கொண்டு இருந்தால், தனுஷுக்கு சில தயக்கம் இருந்துள்ளது. அதற்குள் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் பத்திரிக்கையில் வரத் தொடங்கிவிட்டன.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினி, எப்படி அப்போது, உச்சத்தில் தன்னுடைய மகளுக்கு கஸ்தூரி ராஜா மகனுக்கு கொடுப்பார் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. ஆனால், ஐஸ்வர்யா காதலில் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி இருவீட்டாரின் சம்பதத்துடன், 2004 நவம்பர் 18 ம் தேதி, தன்னை விட மூத்த வயதுடைய ஐஸ்வர்யாவை மனைவியாக்கினார் தனுஷ். இவர்களின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதன் பின் மகிழ்வோடு வாழ்ந்த அவர்களுக்கு மகிழ்ச்சியின் அடையாளமாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ஜொலித்த இவர்களின் குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை 2022ம் ஆண்டு இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சோஷியல் மீடியா கணக்கில் விவாகரத்து செய்யப்போவதாக பதிவை வெளியிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் கருத்துவேறுபாடு காரணமாகத்தான் பிரிந்து இருக்கிறார்கள் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,நேற்று இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் செய்து அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தி உள்ளது. மேலும், இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, அவர்களுக்காக சேர்ந்து வாழலாமே என்றும்,குழந்தைகளை மறந்துட்டீங்களே என்றும் இணைய வாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X