இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்களை பார்க்க ரெடியா.. தனுஷ், அருள் நிதி படங்கள் வெளியாக இருக்கு!
சென்னை : ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளுக்கு இணையான அல்லது அதற்கும் மேலான படங்களை வெளியிட்டு வருகின்றன ஓடிடி தளங்கள்.
திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத பல முன்னணி படங்களை ஓடிடி தளங்களில் குறைவாக கட்டணங்களில் மக்கள் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

சிறப்பான ஓடிடி தளங்கள்
கொரோனா தாக்கம் பல்வேறு மோசமான விளைவுகளை கொடுத்தது. குறிப்பாக லாக் டவுன் உள்ளிட்ட பல பிரச்சினைகளை திரையுலகினர் சந்தித்தனர். மக்களும் என்டர்டெயின்மெண்ட் இல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். அந்த நேரத்தில் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது ஓடிடி.

ஓடிடியின் சிறப்பு
முன்னதாகவே இருந்த போதிலும் கொரோனா காலத்தில்தான் மக்களை சரியான வகையில் ஓடிடி தளங்கள் சென்று சேர்ந்தன. தற்போது திரையரங்குகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளன. குறைவான கட்டணம், அது மாதக் கட்டணமாகவோ ஆண்டு கட்டணமாகவோ இருந்தாலும் ரசிகர்கள் அந்த கட்டணத்தை கட்டி, தங்களுக்கு விருப்பமான ஹீரோக்களின் புதிய மற்றும் பழைய படங்களை பார்த்து வருகின்றனர்.

தமிழில் அதிகரித்துவரும் ஓடிடி தளங்கள்
அந்த வகையில், தற்போது தமிழிலும் அதிகமான தளங்கள் காணப்படுகின்றன. புதியதாக தளங்களும் அறிமுகமாகி வருகின்றன. இந்த தளங்களுக்குள் காணப்படும் போட்டிகளால் கட்டணம் உள்ளிட்டவற்றில் மக்களுக்கு சலுகைகளும் கிடைத்து வருகின்றன. எது எப்படியோ இந்த தளங்கள் மூலம் நாம் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத கிளாசிக் படங்களை பார்க்க முடிவது சிறப்பானது.

ஓடிடியில் சிறப்பான படங்கள்
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளுக்கு இணையாக இந்த ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் தனுஷின் திருச்சிற்றம்பலம், அருள்நிதியின் டைரி உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகவுள்ளன. மற்ற மொழிகளிலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்கள் இந்த வாரம் செப்டம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ளன.

திருச்சிற்றம்பலம் வெளியீடு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் இந்த வாரம் சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், படத்தில் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்களின் நடிப்பு சிறப்பான வரவேற்பை பெற்றது.

அருள்நிதியின் டைரி படம்
இதனிடையே தொடர்ந்து திரில்லர் படங்களாக நடித்து அந்த அனைத்து படங்களையும் வெற்றிப் படங்களாக்கி வரும் அருள்நிதியின் டைரி படமும் இந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி முன்னணி நடிகர்களின் படங்களுடன் போட்டியிட்டு சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

தெலுங்கு, இந்தியில் படங்கள்
இதனிடையே தெலுங்கில் கலாபுரம், பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ ஆகிய படங்களும் இந்த வாரம் ஜீ5 மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளான நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தியிலும் பாப்லி பவுன்சர், ஹுஸ்ஹுஸ் போன்ற படங்கள் முறையே ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் சீரிசில் வெளியாகவுள்ளன.

ஹாலிவுட்டில் லாவ் படம் வெளியீடு
பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படமான லாவ் இந்த வாரம் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. பிரெஞ்ச் படமான அதேனாவும் இந்த வாரம் செப்டம்பர் 23ம் தேதி நெட்பிளிக்சிலேயே வெளியாகவுள்ளது. ஹாலிவுட் உள்ளிட்ட மற்ற மொழிகளில் படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படங்கள் கண்டிப்பாக சிறப்பான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











