அசுரன் சூட்டிங்... இரவில் டப்பிங்... இடையே மாரி செல்வராஜுடன் டிஸ்கசன் - தனுஷ் ஒரே பிஸி
Recommended Video
சென்னை: நடிகர் தனுஷும் இயக்குனர் மாரி செல்வராஜும் இணையும் அடுத்த திரைப்படத்திற்கு கர்ணன் என்று பெயரிட்டுள்ளனர். சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்பு தனுஷுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவர்கள் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் தமிழ் சினிமாவில் மிகவும் தீவிரமான மற்றும் கடின உழைப்பாளி. தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் தனக்கென்று சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படப்பிடிப்பை முடித்த அவர், தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் சர்வதேச திரில்லர் படத்திற்கு லண்டனில் முகாமிட்டு படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸில் நடித்த நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்து வருகிறார். தனுஷுக்கு அசுரன் படத்தின் டப்பிங் வேலை மட்டுமே நிலுவையில் உள்ளது. டப்பிங்குக்காக இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்கிடையில், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். சாதிய கொடுமைகளையும் ஆணவக் கொலைகளையும் தெள்ளத்தெளிவாக வெள்ளித்திரையில் எடுத்துக்காட்டிய இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷுடன் இணைந்து திரைப்படம் இயக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சரித்திரப்படமான கர்ணன் படத்தலைப்பையே தனுஷ் நடிக்கும் படத்திற்கு வைத்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் கதை முன்னேற்றங்களைப் பற்றி விவரிக்க மாரி செல்வராஜ் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க தனுஷ் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். ஏனெனில் மாரி செல்வராஜ் மூலம் அசுரன் காட்சிகளை லண்டனுக்கு அனுப்புமாறு வெற்றிமாறனிடம் கேட்டுக்கொண்டார். அதோடு ஏ.ஆர்.ரகுமானின் லண்டன் ஸ்டுடியோவில் டப்பிங் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக பகலில் படப்பிடிப்பு நடத்தவும், இரவில் அசுரன் படத்திற்கு டப்பிங் செய்யவும், இடையில் எங்காவது மாரி செல்வராஜுடன் கதையைப் பற்றி விவாதிக்கவும் முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவு நேரம் மேலாண்மை காரணமாக எடுக்கப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாரி செல்வராஜ்-தனுஷ் இணையும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்பு தனுஷுக்கு கிடைக்குமா இல்லை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











