தனுஷ் பட டிஸ்கசன்: சந்தோஷ் நாராயணனுடன் லண்டன் பறந்த மாரி செல்வராஜ்
சென்னை: பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணுடன் லண்டன் பறந்திருக்கிறார். அங்கு சூட்டிங்கில் பிஸியாக இருக்கு தனுஷ் உடன் அடுத்த படம் பற்றி டிஸ்கசனில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.

இந்த படத்துக்கு கர்ணன் என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜீஷா விஜயன் நடிக்கவிருப்பதாக நாம் முன்பே அறிவித்திருந்தோம் இவர் மலையாளத்தில் அனுராக கரிக்கின் வெள்ளம், ஜூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த வருடம் வெளியான படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தனுஷிடம் நேரடியாக விவாதிக்க இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது லண்டன் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சூட்டிங் முடிந்த பின்னர் மாரி செல்வராஜூம் இசையமைப்பாளரும் புதிய படம் பற்றி தனுஷிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் தனுஷிடம் ஆலோசனை பெற்ற பின்னர் அவர் மீண்டும் சென்னை திரும்பி படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
தனது லண்டன் பயணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன். படக்குழுவினரையும் வாழ்த்தியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.


Click it and Unblock the Notifications











