ரியல் லைஃபில் நடந்த படையப்பா பட காட்சி.. இட்லி கடை பட தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் & நயன்தாரா!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பற்றி எரிந்தது. தன்னுடைய ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை சேர்க்க தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா கொதித்தெழுந்த நிலையில், இதுகுறித்து அவர் 3 பக்க அறிக்கையையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, இந்த விஷயத்தில் நயன்தாராவிற்கு ஆதரவு பெருகியதையும் பார்க்க முடிந்தது. அவரது ஆவணப்படமும் நெட்பிளிக்சில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் எதிரெதிரில் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

dhanush nayanthara akash bhaskar

நயன்தாரா & தனுஷ் விவகாரம்: நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் யாரடி நீ மோகினி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களின் கூட்டணிமிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. இந்நிலையில் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின்போது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையில் காதல் ஏற்பட்டது.

dhanush nayanthara akash bhaskar

இவர்கள் இருவரும் தொடாந்து 7 ஆண்டுகள் காதலித்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் இவர்களது திருமணம் மகாபலிபுரத்தை அடுத்த ரெசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமாக நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

dhanush nayanthara akash bhaskar

நயன்தாரா ஆவணப்படம்: இவர்களின் திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அப்போதே கூறப்பட்ட நிலையில், இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த 18ம் தேதிதான் இந்த ஆவணப்படம் ஓடிடியில் வெளியானது. முன்னதாக இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்பதை 3 பக்க அறிக்கை மூலம் நயன்தாரா தெளிவுப்படுத்தியிருந்தார். தங்களின் காதலுக்கு அடித்தளமாக அமைந்த நானும் ரவுடிதான் படத்தின் சில கிளிப்பிங்குகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தனுஷை மிகவும் மோசமானவராகவும் அவர் விமர்சித்திருந்தார்.

dhanush nayanthara akash bhaskar

இட்லிகடை பட தயாரிப்பாளர் திருமணம்: இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் பற்றியெரிந்த நிலையில் நயன்தாராவிற்கு ஆதரவாக நடிகைகள் ஸ்ருதிஹாசன், பார்வதி, அனுபமா உள்ளிட்டவர்கள் தங்களது வரவேற்பை தெரிவித்திருந்தனர். அவர்கள் அனைவரும் முன்னதாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், அவர்கள் தனுஷால் பாதிக்கப்பட்டார்களா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இட்லி கடைபடத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

dhanush nayanthara akash bhaskar

எதிரெதிரில் தனுஷ் & நயன்தாரா: இந்த திருமணத்தில் நடிகை நயன்தாரா பங்கேற்ற நிலையில், நடிகர் தனுஷும் கலந்துக் கொண்டார். ஆகாஷின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில்தான் தன்னுடைய இட்லி கடை படத்தை இயக்கி தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் இந்த திருமணத்தில் எதிரெதிரில் சந்தித்துக் கொள்ளும் சூழல் உருவானது.

dhanush nayanthara akash bhaskar

இவர்கள் இருவரும் அடுத்தடுத்து அமர்ந்திருக்கும்படியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. இவர்களின் இந்த புகைப்படம் முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா படத்தின் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் காட்சியை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

dhanush nayanthara akash bhaskar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X