தனுஷ் அக்கா மகன் நடிப்பை பார்க்க ரெடியா?.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட்!
சென்னை: நடிகர் தனுஷின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளதாக தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து யூடியூபிலும் ட்ரெண்டிங்கில் உள்ளன.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டில் ரிலீசுக்கு தயாராகி உள்ளன/ சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் தனுஷ் இணைந்து வருகிறார். பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெய்ன் படம் உருவாகி வரும் நிலையில் அந்த படமும் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஹாலிவுட்டிலும் அவர் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.
Neek படத்தின் ட்ரெயிலர்: இந்த படங்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் தனுஷின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ளது. முற்றிலும் இளைஞர்களை வைத்து இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இந்த படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை திட்டமிட்டு வருகிறார் தனுஷ். இந்நிலையில் வரும் 10ம் தேதி இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த படத்தில் அவரது அக்கா மகன் பவிஷை லீட் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் தனுஷ். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் தனுஷும் அடுத்தடுத்த பாடல்களை பாடியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசை: படத்தன் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ கேரக்டரில் நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் யூடியூபில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக காதல் பெயில் பாடலும் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பை பெற்றது. தனுஷ் -ஜிவி பிரகாஷ் காம்பினேஷன் எப்போதுமே சிறப்பாக அமையும். அந்த வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் அதிகமான கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை இயக்கி தயாரித்துள்ள தனுஷ், சரத்குமாருடன் இணைந்து முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளார்.
தள்ளிப் போன ரிலீஸ்: முன்னதாக இந்தப் படம் கடந்த 7ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீசால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்த படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பட குழுவினர் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் தனுஷ், பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.படத்தை தன்னுடைய வொண்டர்பார் நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் பெற்ற நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











