Ilayaraja biopic: நாளை வெளியாகும் இளையராஜா பயோபிக் குறித்த அறிவிப்பு.. தனுஷ் உற்சாகம்!
சென்னை: இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் மச்சானப் பாத்தீங்களா என துவங்கிய இவரது பயணம் 47 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. பத்ம பூஷன், பத்ம விபூஷன் என உயரிய விருதுகளை பெற்றுள்ள இளையராஜா, தலைமுறைகளை கடந்து தன்னுடைய இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போதைய இளைஞர்களின் பெஸ்ட் சாய்சும் இவராகவே உள்ளார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களையும் இசை மேதைகளையும் கவர்ந்தவராக உள்ளார் இளையராஜா.
இளையராஜாவின் பயோ பிக் உருவாகவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் நாளைய தினம் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். இந்தப் படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் இளையராஜா, இசையமைப்பாளராவதற்கு முன்னதாக அவர் கடந்து வந்த பாதையை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா பயோபிக்: இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. பண்ணையபுரத்தில் இருந்து தன்னுடைய ஹார்மோனிய பெட்டியின் துணையுடன் சென்னை வந்த இளையராஜா இசைஞானியாக உருமாறியது மிகப்பெரிய வரலாறு. இளையராஜா இசைதான் இந்த காலத்திய இளைஞர்களுக்கும் தாலாட்டு, தன்னுடைய சூப்பர் ஹிட் பாடல்களால் பல தலைமுறைகளை தாண்டி இவர் சிறப்பான புகழை பெற்றுள்ளார். இனிமையான தனிமைக்கும் இளையராஜா இசையே கை கொடுக்கும். அந்த வகையில் கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் துவங்கிய பயணத்தை 1500 படங்களை தாண்டி இசையமைத்து வருகிறார் இசைஞானி.
இளையராஜா பயோபிக்: இந்த வயதிலும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக தொடர்ந்து சிறப்பான பல படங்களுக்கு இசையமைத்து பல வெற்றிகளை கொடுத்து வருகிறார். இசைக்கு மட்டும் அவர் ஞானி அல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்து வருகிறார். தற்காலங்களில் பல பிரபலங்களின் பயோபிக் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளையராஜாவின் வாழ்க்கை கண்டிப்பாக பயோபிக்காக எடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பது பல்வேறு தரப்பினரின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் இளையராஜாவின் பயோபிக் தற்போது படமாக்கப்பட உள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்: பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இளையராஜாவிற்கு பிடித்தமான நடிகரான தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு நாளைய தினம் வெளியாக உள்ளதாக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த அப்டேட்டில் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.
தனுஷ் உற்சாக பதிவு: நாளை பிற்பகல் 12.30 மணிக்கு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் அறிவிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக தன்னுடைய பயோ பிக்கிற்கான முக்கிய நிகழ்வுகளை இளையராஜா தொகுத்து திரைக்கதையை எழுதி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரரான தனுஷின் பயோபிக் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அவரே இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











