Raayan movie: ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்.. அப்ப ரிலீஸ்?

சென்னை: நடிகர் தனுஷ், எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ராயன் படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்கத்தை செயல்படுத்தியுள்ளார்.

இந்த படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்நிலையில் இன்றைய தினம் படம் குறித்த அப்டேட் வெளியாக உள்ளதாக தனுஷ் முன்னதாக அறிவித்திருந்தார். தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்சும் அறிவித்திருந்தது. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Actor Dhanush announces about the first single update on Raayan movie

ராயன் படம்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். நிற்ககூட நேரம் இல்லாமல் அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும்நிலையில், அடுத்ததாக அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் படம் கடந்த மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு: இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார். வரும் 9ம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகள் தாமதமாகி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியான சூழலில் படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கு இது காரணமாக கூறப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை தற்போது படக்குழு துவங்கியுள்ளது.

வித்தியாசமான போஸ்டர்: இதையொட்டி வித்தியாசமான போஸ்டரும் வெளியாகியுள்ளது. பின்னணியில் ராவணனின் உருவம் காட்டப்பட்டிருக்க, முன்னதாக அமர்ந்திருக்கும் தனுஷ், எரிக்கப்படுவதாகவும் அதை அனைவரும் கொண்டாடுவதாகவும் இந்த போஸ்டரில் காணப்படுகிறது. ஆனால் இந்த போஸ்டரில் தனுஷ் தீவிரமான பார்வையுடன் காணப்படுகிறார். முன்னதாக வெளியான போஸ்டரிலும் இதையொட்டிய காட்சியே காணப்பட்டது.

தனுஷ் இயக்கத்தில் ராயன்: இதனிடையே விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் ராயன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷிற்கு சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் இருவரும் தம்பிகளாக நடித்துள்ளனர். எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சரவணன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதைக்களம்: இத்தனை கேரக்டர்களை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்த படம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். வயதான காலத்தில் குடும்பத்தினருடன் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து ப பாண்டி படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இந்த படத்தில் அவர் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் அவர் இயக்கத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். இந்த படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X