ஹாலிவுட்டே மிரண்டு போச்சு..’’தி கிரே மேன்’’ பட புரோமோஷனுக்கு வேஷ்டி சட்டையில் வந்த தனுஷ்!
மும்பை :''தி கிரே மேன்'' பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து டாப் நடிகர்கள் பட்டியலில் உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்த தனுஷ் தற்போது தி கிரே மேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் வெளியாக உள்ளது.

ருஸ்ஸோ பிரதர்ஸ்
கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. ருஸ்ஸோ பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களது இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘தி கிரே மேன்'.
Recommended Video

ரசிகர்கள் ஆர்வம்
ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகிய ஹாலிவுட்டில் டாப் நடிகர்களுடன் தனுஷ் இணைந்து நடித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை காண தனுஷின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்தில் அவிக் சான் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவருடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், ஜூலியா பட்டர்ஸ், அனா டி அர்மாஸ் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.

22ந் தேதி ஓடிடியில்
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இதில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அப்போது மூன்று பேரும் பிளாக் அண்ட் பிளாக்கில் கலக்கலாக இருந்தனர்.

வேட்டி சட்டையில்
இந்நிலையில், மும்பையில் தி கிரே மேன் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ்,மிகவும் சாதாரணமாக வேட்டி மற்றும் சட்டையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் தமிழ்நாட்டின் கலாச்சாரப்படி வணக்கம் கூறி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே கோட்டு சூட்டு மற்றும் நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்த போதிலும், தனுஷ் மிகவும் எளிமையாக வேஷ்டி சட்டையில் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அசத்திய தனுஷ்
இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் நடிகர் விக்கி கவுஷலை சந்தித்த தனுஷ் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேர்.மேலும், இயக்குநர் ருஸ்ஸோ பிரதர்ஸ் ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.அவர்களையும் தமிழ்நாட்டு முறைப்படி வணக்கம் சொல்லவைத்து அசத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











