துவங்கியது கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்.. நெல்லை பறந்த தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசான வண்ணம் உள்ளது.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி படங்கள் வெளியாக உள்ளன. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. கோலிவுட் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எதையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து தன்னுடைய கொடியை நாட்டி வருகிறார் தனுஷ். ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தி க்ரே மேன் என அவரது படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் நேரடியாக வெளியாகின.

கைக்கொடுத்த திருச்சிற்றம்பலம் படம்

கைக்கொடுத்த திருச்சிற்றம்பலம் படம்

இதனிடையே சமீபத்தில் அவரது நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசான திருச்சிற்றம்பலம் படம் அவருக்கு வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. ஆண் -பெண் நட்பை இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டு இயல்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளின்மூலம் சிறப்பாக்கியிருந்தார் இயக்குநர்.

நானே வருவேன் ரிலீஸ்

நானே வருவேன் ரிலீஸ்

இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு நாளில் தனுஷின் நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவும் இயக்கியுள்ளதுடன் படத்தில் முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அடுத்தது வாத்தி ரிலீஸ்

அடுத்தது வாத்தி ரிலீஸ்

இந்தப் படத்தை தொடர்ந்து டிசம்பர் 2ம் தேதி தனுஷின் வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிப்படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் அவருக்கு ஜோடியாகியுள்ளார். கல்விக் கொள்கைகளை இந்தப் படம் கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்

தனுஷின் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக இணையவுள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

பிரம்மாண்டமான கிராமம் செட்

பிரம்மாண்டமான கிராமம் செட்

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் போன்றவர்களும் இணைந்துள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. படத்தின் சூட்டிங்கிற்காக தென்காசியையொட்டி பிரம்மாண்டமான அளவில் கிராமம் செட் போடப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங்கிற்காக தனுஷ் இன்றைய தினம் நெல்லை சென்றுள்ளார்.

அழுத்தமான கதைக்களம்

அழுத்தமான கதைக்களம்

ராக்கி, சாணிக்காயிதம் போன்ற அழுத்தமான கதைகளை கொடுத்துள்ள அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தில் தனுஷை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அழுத்தமான கதைகள் என்றால் தனுஷ் புகுந்து விளையாடுவார், அந்த வகையில் இந்தப் படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X