For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அசுர நாயகன் தனுஷுக்கு இன்று 37வது பிறந்தநாள்.. இணையத்தை வாழ்த்துக்களால் தெறிக்கவிட்ட ரசிகர்கள் !

  |

  சென்னை : தன்னுடைய அசுர நடிப்பின் மூலம் உலகையே வியக்க வைத்து வரும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகராக விளங்கி வருகிறார்.

  Dhanush Atrangi Re Making | Sara Ali Khan, Akshay Kumar

  பொறுமை மற்றும் எளிமை என தன்னைத்தானே பக்குவபடுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வெற்றி வலம் வந்த இவர் தற்பொழுது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.

  இவ்வாறு சிறந்த நடிகராக விளங்கி வரும் தனுஷ் ஜூலை 28 ஆம் தேதியான இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ஒருவாரத்திற்கு முன்பிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டு இன்று ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் எனப் பலரின் வாழ்த்துக்களால் இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

  லாக்டவுனால் 4 மாதம் மூடல்.. தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.1500 கோடி இழப்பு.. விரைவில் திறக்க கோரிக்கை! லாக்டவுனால் 4 மாதம் மூடல்.. தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.1500 கோடி இழப்பு.. விரைவில் திறக்க கோரிக்கை!

  ஹீரோ மெட்டீரியல் கிடையாது

  ஹீரோ மெட்டீரியல் கிடையாது

  இன்று பலராலும் சிறந்த நடிகர் என போற்றப்பட்டு வரும் தனுஷ் ஆரம்ப காலகட்டங்களில் எதிர் நோக்காத அவமானங்களே இல்லை, என அவரே பல பேட்டிகளிலும் பல மேடைகளிலும் வெளிப்படையாக பேசியுள்ளார். சரியாக நடனமாட தெரியாது, பேட்டிகளில் தைரியமாக பேச தெரியாது, ஆங்கிலம் வரவே வராது மற்றும் ஒல்லியாக இருக்கான் இவன் எல்லாம் ஹீரோ மெட்டீரியல் கிடையாது என பலராலும் கேலி பேசப்பட்டு இன்று தன்னைத் தானே ஒவ்வொரு நிலையிலும் தயார்படுத்திக் கொண்டு வீறுகொண்ட நாயகனாக உலகமே வியக்கும் வகையில் உயர்ந்து நிற்கிறார்.

  இணையும் கூட்டணி

  இணையும் கூட்டணி

  இவர் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும், செல்வராகவன் மற்றும் வெற்றிமாறனுடன் இவர் இணையும் கூட்டணி என்றுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இவர்களின் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் எதிர்பார்ப்பை கூட்டி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

  கண்டிப்பாக இருப்பேன்

  கண்டிப்பாக இருப்பேன்

  அவ்வாறு தன்னுடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் உடன் இணைந்து துள்ளுவதோ இளமை மூலம் நடிக்க தொடங்கிய தனுஷ் இன்றுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ளார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தான் கண்டிப்பாக இருப்பேன் என கூறியிருக்கிறார்.

  தனுஷுடன் இணையும்

  தனுஷுடன் இணையும்

  இவ்வாறு செல்வராகவன் கூட்டணி ஒருபுறமிருக்க மற்றொருபுறம் வெற்றிமாறன் என்ற அசுர இயக்குனர் தனுஷுடன் இணையும் ஒவ்வொரு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளை தொடர்ந்து தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.

  5 வது முறையாக

  5 வது முறையாக

  அவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்த பொல்லாதவன் தொடங்கி ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தமிழ் ரசிகர்களுக்கும் தமிழ் திரைத் துறைக்கும் படத்திற்கு படம் எதிர்பார்ப்பை கூட்டி வரும் இந்தக் கூட்டணி இன்று வரை மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் 5 வது முறையாக இணைய உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

  தன்னம்பிக்கை நடிகராக

  தன்னம்பிக்கை நடிகராக

  இவ்வாறு நடிப்பில் பல வித்தியாசங்களை காட்டி தமிழ் சினிமாவால் சிறந்த நடிகர் என பல முறை கௌரவிக்கப்பட்டு, தற்பொழுது ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் தனுஷ் பல வளர்ந்து வரும் நடிகர்களுக்கு தன்னம்பிக்கை நடிகராக திகழ்ந்து வருகிறார்.

  பிறந்த நாள்

  பிறந்த நாள்

  தன்னுடைய ஒவ்வொரு நிலையிலும் வரும் தடைகளை எல்லாம் தகர்த்து தனக்கென ஒரு பாதை அமைத்து வெற்றி நாயகனாக வலம் வரும் தனுஷ் ஜூலை 28 ஆம் தேதியான இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பலவிதமான காமன் டிபிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களால் இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர் தற்போது நடித்து வரும் ஜகமே தந்திரம் திரைப்படக் குழு பிறந்தநாள் பரிசாக ரகிட ரகிட ரகிட என்ற பாடலை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகின்றது.

  English summary
  Actor Dhanush Birthday Special
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X